Healer Ramu

Healer Ramu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Healer Ramu, Health/Beauty, Dr Radhakrishna Road Gandhipuram Coimbatore, Coimbatore.

சிரிப்பு யோகாவின் ரகசியம் | Secrets of Laughter Yoga | Mind Power Healer K.Ramu.AD, ACU 02/12/2023

சிரிப்பு யோகாவின் ரகசியம் | Secrets of Laughter Yoga | Mind Power Healer K.Ramu.AD, ACU

https://youtu.be/FFMtD1sw83U

சிரிப்பு யோகாவின் ரகசியம் | Secrets of Laughter Yoga | Mind Power Healer K.Ramu.AD, ACU சிரிப்பு யோகாவின் ரகசியம் | Secrets of Laughter Yoga | Mind Power Healer K.Ramu.AD, ACUகோவை சிரிப்பு யோகா சங்கம் நடத்தும் LAUGHTER யோகா பயிற்சியில் கலந்த....

22/10/2020

செள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது.

- இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.

- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
- புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
- இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
- நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.
- இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
- வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

தொடர்புகொள்ளவும்
துளிர் இயற்கை அங்காடி
கோயம்புத்தூர்
Whatsapp link 👇
https://wa.me/918760048302
8760048302
1 kg =70 rs

12/10/2020

கருப்பு அரிசி அல்லது கவுனி அரிசி பயன்கள்

கருப்பு அரிசி என்றாள் தமிழில் இன்னொரு பெயர் உள்ளது அது தான் “கருப்பு கவுனி அரிசி”. அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வலியேற்ற எதிர்பொருள் (Anti-oxidant) நிறைந்தது. இந்த அரிசி அதிகமாக செட்டியார் வீட்டு திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இனிப்புப்பொங்கல், பாயசம் வைப்பார்கள்.

மன்னர்களின் காலத்தில் இந்த கவுனி அரிசின் (கருப்பு அரிசி) சத்துக்கள் ரகசியம் தெரிந்த அரசர்களும், மந்திரிகளும் மட்டுமே பயன்படுத்துவர்களாம், மக்கள் யாராவது கருப்பு அரிசியை பயன்படுத்தினால் தண்டிக்க பாடுவார்களாம்.

கருப்பு கவுனியின் பயன்கள்:

உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது.

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.

நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..

தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.

உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ – பயன்கள்: தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

என்ன வகையில் சமைக்கலாம்:

1. இனிப்பு பொங்கல் 2. பாயசம் 3.சாதம் 4.கஞ்சி 5.இட்லி மற்றும் தோசை

கருப்பு கவுணி அரிசி தேவைக்கு தொடர்பு கொள்ளவும் +918760048302

#கருப்புகவுனி அரிசி - கருப்பில் இருக்கும் சிறப்பு

நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.

பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

அரசர்களின் அரிசி

சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள்.

கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.

இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

#கருப்புகவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைத் தக்க வைக்கிறது. நச்சுப் பொருள்கள் உடலில் சேர்வதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கவுனி அரிசியில் காணப்படும் ‘பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ (Phytonutrients), உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், கல்லீரல், ரத்த நாளங்கள், பெருங்குடல் ஆகியவற்றில் குவியாதவாறு தடுக்கிறது.

#கருப்புகவுனி அரிசியும் பழுப்பு அரிசியைப்போன்ற சுவையைக் கொண்டதுதான். சமைக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சமைத்தால் எளிதாக இருக்கும். உணவும் மென்மையாக இருக்கும். இன்று மளிகைக் கடைகளில்கூட கவுனி அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது. கவுனி அரிசியின் முழுப்பயன்களும் அதன் மேல்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிட்டில்தான் இருக்கிறது. அதனால் வாங்கும்போதே முழுக் கவுனி அரிசியா என்று பார்த்து வாங்க வேண்டும்

தொடர்புகொள்ளவும்

துளிர் இயற்கை அங்காடி
கோயம்புத்தூர்

Whatsapp link 👇
https://wa.me/918760048302

8760048302

Photos from Thulir organic's post 31/12/2019
22/08/2019
Want your business to be the top-listed Beauty Salon in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dr Radhakrishna Road Gandhipuram Coimbatore
Coimbatore
641012