Lanka Buzz 360
“Your #1 source for latest Sri Lanka & world news 🌍 | Sports 🏏 | Entertainment 🎬 | Viral Reels 🔥 | Stay updated 24/7 with Lanka Buzz 360 ⚡”
06/05/2026
01.நாளை பதவியேற்பு விழா இல்லை- என்.டி.ரி.வி
02.ஆதரவு வழங்கப்போவதில்லை- அஇஅதிமுக
03.தலைமையின் தீர்மானம் குறித்து சில அஇஅதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி
04.திமுகா கூட்டணி உடைந்தது - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு
05.118 பேரின் பட்டியலை தாருங்கள். பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றேன்- தமிழக ஆளுநர்
06. நாளைய நாளுக்கு பின்னர் அடுத்தடுத்து சுப தினங்களை கணிப்பிடுவதில் சிக்கல்.
07.ஆளுநர் கேரளம் செல்லவுள்ளாராம்....
இன்றைய தினம் (06.05.2026)பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள, "தமிழக வெற்றிக் கழக தலைவர் கௌரவ விஜய்" அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
நாங்கள் இந்த நாட்டில் 200 வருடமாக வாழ்ந்து வருகின்றோம். பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆனால் இந்த நாட்டைவிட்டு வெளியே வந்தால் எங்களையும் இலங்கையர்களாகவே பார்க்கின்றார்கள்.
எனவே, எங்களுக்கென்று தனியான வரலாறுண்டு அதனால் மலையக மக்களுக்கும் தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என்று உரையாற்றியிருந்தார்.
| #மலையகம் | | | |
06/05/2026
நாளை த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் நேரு விளையாட்டரங்கம்.
06/05/2026
நோர்வூட் பகுதியில் புதிதாக திறக்கப்படவிருக்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்பாட்டம், பொது வேலைத்திட்டங்களை நிவர்த்தி செய்து, அரச திணைக்களங்களை மீண்டும் நோர்வூட் நகருக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையோடு மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
06/05/2026
கொழும்பு / பதுளை: இலங்கையின் மலையகப் புகையிரத சேவையை நவீனமயமாக்கும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பிரதான பாதையின் (Main Line) மீளமைப்புப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயங்கள் காரணமாகப் புகையிரதப் பாதையின் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதனைச் சீர்செய்து, சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் இந்தப் பாதையை மேம்படுத்த அரசாங்கம் மற்றும் புகையிரத திணைக்களம் இந்த விசேட திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மேலும், நானுஓயா, பதுளை மற்றும் ஹட்டன் போன்ற பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு, பாதுகாப்பான சுவர்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் அமைக்கப்படுகின்றன.
காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட பழமையான புகையிரதப் பாலங்கள் பலப்படுத்தப்பட்டு வருவதுடன், பல தசாப்தங்கள் பழமையான தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதிக பாரத்தைத் தாங்கக்கூடிய புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
06/05/2026
அமெரிக்காவின் ஸ்ட்ராடோடேங்கர் விமானம் இன்று காலை பாரசீக வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது. பாரசீக வளைகுடாவின் மீது பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானம் ஒரு அவசர அழைப்பை விடுத்துத் தளத்திற்குத் திரும்ப முயன்றது. கத்தாரை அடைவதற்கு முன்பே, அந்த விமானத்தின் டிரான்ஸ்பாண்டர்கள் செயலிழந்துவிட்டன.
விஜய் 50,000 க்கு மேற்பட்ட வாக்குகளால் பெரம்பூரில் வெற்றி.
திருச்சி கிழக்கில் 26000 வாக்குகளால் வெற்றி.
எடப்பாடி பழனிசாமி 98000 வாக்குகளால் எடப்பாடியில் வெற்றி.
ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி.
பல முன்னாள் அமைச்சர்கள் (திமுக, அதிமுக) தோல்வி.
தவெக 108 தொகுதிகளில் முன்னிலை + வெற்றி !
03/05/2026
இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரப் பதிவுகள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 'மார்க்கெட்டிங் ஹப்' (Marketing Hub) அறிக்கையின்படி, கோலி ஒரு விளம்பரப் பதிவிற்கு சுமார் 1.4 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 12 கோடி ரூபா) வருமானமாகப் பெறுகிறார். இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, உலகளவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மூன்றாவது நபராக கோலி உருவெடுத்துள்ளார்.
01/05/2026
இந்த வருடத்திற்குள் பலர் கைது செய்யப்படலாம். ஜனாதிபதி நுவரெலியா மேதின கூட்டத்தில் தெரிவிப்பு.
01/05/2026
நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின்
பிரம்மாண்ட மே தினப் பேரணி!
"மக்கள் ஆட்சிக்கு - மக்கள் பலம்" எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டம் இன்று (01) முற்பகல் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது.
Click here to claim your Sponsored Listing.
