Healthytipps

Healthytipps

Teilen

Beauty , Health & cook Natural Tips

14/10/2023

எவரால் தூக்கி
வைத்து கொண்டாட படுகிறோமோ
அவர்களாளே
தூக்கி எறிய படுவது
தான் காதலின்
#விதி #கர்மா

18/04/2023

நண்பர்களின் கனிவான கவனத்திற்கு!

*கிடைத்தற்கரிய இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.*

1. The *STOMACH*
is injured when
you do not have
breakfast in the
morning.

காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.

2. The *KIDNEYS*
are injured when
you do not even
drink 10 glasses
of water in 24
hours.

தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

3. *GALLBLADDR*
is injured when
you do not even
sleep until 11
o'clock and do not
wake up to the
sunrise.

இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.

4. The *SMALL*
*INTESTINE* is
injured when you
eat cold and stale
food.

மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.

5. The *LARGE*
*INTESTINES* are
injured when you
eat more fried
and spicy food.

அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.

6. The *LUNGS* are
injured when you
breathe in smoke
and stay in
polluted
environment of
ci******es.

புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.

7. The *LIVER* is
injured when you
eat heavy fried
food, junk, and
fast food.

துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.

8. The *HEART* is
injured when you
eat your meal with
more salt and
cholesterol.

அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.

9. The *PANCREAS*
is injured when
you eat sweet
things because
they are tasty and
freely available.

அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.

10. The *Eyes* are
injured when you
work in the light
of mobile phone
and computer
screen in the
dark.

இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

11. The *Brain* is
injured when you
start thinking
negative
thoughts.

எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.

12. The *SOUL* gets
injured when you
don't have family
and friends to
care and share
with you in life
their love,
affection,
happiness,
sorrow and joy.

நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.

*All these body parts are NOT available in the market.*

*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*

So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.

EFFECTS OF WATER
தண்ணீரின் அவசியம்.
💐 We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!

தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.

Did you??? உங்களுக்குத் தெரியுமா???

💦 Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;

சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.

1⃣ 1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..

காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.

2⃣ 1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..

உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.

3⃣ 1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.

குளிப்பதற்கு முன்னர் ஒஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

4⃣ 1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.

இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.

'When someone
shares something of
value with you and
you benefit from it,
You have a moral
obligation to share it
with others too.'
So..., DO yours!..

யாராவது நமக்கு ஏதாவது நன்மை தரும் செய்தியை பகிர்ந்து, அதனால் நாம் பலனடைந்தால் அத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது நமது தார்மீகப் பொறுப்பாகும். எனவே நீங்களும் உங்களது பங்கைச் செய்ய வேண்டுகிறேன்.....🙏🏻🙏🏻🙏🏻

Photos from Healthytipps's post 20/12/2022

மனிதனின் வாழ்க்கையில் முக்கியமா #மருத்து எண்கள்…👍👍👍 #நரம்புகள்

Parrots love 28/11/2022

https://youtube.com/shorts/wA8_5eFNA-4

Parrots love Hello everyone! I'm Kajanthini, and here's the official channel to keep you hooked. Join Tk lifestyle glitz to know more about me. Subscribe to my channel an...

27/11/2022

Laddu :

பேரிச்சை - 250g
முந்திரி - 75g
பாதாம் - 75g
நில கடலை- 75g
பூசணி விதை-75g
நெய் - சிறிதளவு

* சிறிது நெய்யில் முந்திரி, பாதாம், நிலகடலை, பூசணி விதைகளை,வறுத்து கொரகொரப்பாக பொடிக்கவும்ங்க.

* மேலும் சிறிது நெய்யில் விதை நீக்கிய பேரிச்சை மசிந்து வரும்வரை வதக்கி கூட பொடித்த பருப்பு வகைகளைக் கலந்து நன்றாக சேர்ந்து வந்ததும் உருண்டை பிடிக்கலாம். Dry Fruits Laddu தயார்.

*கசகசா, ரோஜா இதழ்கள், வெள்ளரி விதைகள்,berries, walnut, Pista, அத்தி.......உங்களுக்கு பிடித்தமான Drynuts & Dry Fruits சேர்க்கலாம்ங்க.

* கடையில் வாங்குவதை விட மிகச்சிறப்பாக உள்ளதுங்க. எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் காரணம் இதில் தனிப்பட்ட முறையில் இனிப்பு சேர்ப்பதில்லங்க, பேரிச்சையில்லுள்ள இனிப்பே போதுமானதுங்க.

22/11/2022

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்
===============
#மூளை
================
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.🍀
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.🍀
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.🍀
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.🍀
================
#கண்கள்
================
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.🍀
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.🍀
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.🍀
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது🍀.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.🍀
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்🍀.
==============
#பற்கள்
==============
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.🍀
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.🍀
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.🍀
===================
#நரம்புகள்
===================
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்🍀.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.🍀
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.🍀
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.🍀
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
===============
#ரத்தம்
===============
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.🍀
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.🍀
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.🍀
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.🍀
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.🍀
=================
#சருமம்
=================
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.🍀
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்🍀.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.🍀
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.🍀
===================
நுரையீரல் & இதயம்
===================
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.🍀
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.🍀
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்🍀.
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.🍀
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.🍀
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்🍀.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.🍀
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது🍀.
=============
#வயிறு
=============
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.🍀
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
🌹வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.🌹
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.🌹
🌹சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.🌹
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்🍀.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்🍀
===================
கல்லீரல் & மண்ணீரல்
===================
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.🍀
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்🍀.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்🍀
===============
மலக்குடல்
===============
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.🍀
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.🍀
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.🍀
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.🍀
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்🍀.
================
பாதம்
================
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்🍀.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.🌹
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.🍀
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

13/11/2022

உலகத்தமிழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை . என்ன மனுசன் இவன் இப்படி எல்லாம் கதைப்பாங்களா? மிரட்டல் கொலை கொள்ளை கொண்ட ஒருவரால் எப்படி தமிழ் மக்களை காப்பாற்ற முடியும் உதவமுடியும்? சற்று சிந்தியுங்கள்? இதுவும் ஒருவித கொள்ளை தான்?

#எழுவான் #கனடாகப்பல்

Photos from Healthytipps's post 12/11/2022

இன்றைக்கு பெரும்பாலான அசைவம் விரும்பிகள் வீட்டில் திருமணமான புதிய தம்பதிகளுக்கு இருவீட்டாரும் ஆக்கிப்போடும் உணவு மலிவான கறிக்கோழி, பாப்பிரீட் மீன் போன்ற ஹைப்ரிட் இறைச்சி வகைகள்தான்.
helth
ஆனால் அந்த காலத்தில் இயற்கை வயாகரா உணவை புதிய தம்பதிகளுக்கு கொடுத்தார்கள். அதை உண்டு சுவைக்க ஒரு விளக்கை ஏற்றி வைத்தார்கள் அவைகள் உங்கள் பார்வைக்கு இதோ. இதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். சரியாக புரிந்துகொண்டால் கருத்தரிப்பு மையம் நம் பிள்ளைகளுக்கு அவசியம் இல்லை. இன்றும் சாந்தி முகூர்த்தம் அன்று விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். விளக்குகள் மாறிவிட்டது.
_________________________________________

1 . தேங்காய் பாலை அன்னத்துடனாவது அல்லது பலகாரங்களுடனாவது சேர்த்துண்ண சுத்த இரத்தம் உண்டாகும்.

2 . தாது பலம் ஏற்படும்

3 . இடுப்பு வலி , கீல்வாதம் , பாரிசவாதம், இரணம், தேக அழற்சி, மூலம் , வாய்நாற்றம் முதலியவைகள் குணமாகும்.

4 . தேங்காயுடன் கசகசாவை சேர்த்து அரைத்து பிழிந்தெடுத்தப் பாலில் கொஞ்சம் சுக்குத்தூள் சேர்த்து இடியாப்பம் , ஆப்பம் போன்ற உணவில் இனிப்பு சேர்த்து சாப்பிட்டால் அது இயற்கை வயாகராவாக வேலை செய்யும்.

எனவே திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பிருந்தே இந்த உணவை இருவருக்கும் கொடுத்து வந்தால் தாம்பத்திய உறவு சிறக்கும் உடனே கருத்தரிக்கும்.

31/10/2022

சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி, 43 வயதில் மரணமடைந்திருப்பது, அவரது மரணத்துக்கு பேலியோ டயட் உணவுப்பழக்கமே காரணம் என்ற தகவலால் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவர் பேலியோ டயட் உணவுப் பழக்கத்துக்கு மாறியபின்னர் அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதற்காக மருத்துவச்சிகிச்சை எடுத்தும் சரியாகாமல், கோமா நிலைக்குச் சென்று, அதன்பின் மரணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்றைய சமூக வலைத்தளச் சூழலில் உடல் நலன் குறித்த அக்கறை அதிகரித்துவருவது மிகவும் நல்ல விஷயம் தான். ஒருவரைப் பார்த்து ஒருவர், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகா பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி என்றெல்லாம் இறங்கி, உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்ல மாற்றமே. அதேவேளை, உடல் பருமனாக இருப்பவர்கள், உடல்நலக் கோளாறோடிருப்பவர்கள் பலரும், எதாவது செய்து நம்முடைய உடலின் எடையைக் குறைக்க, உடல்நலத்தைச் சரிசெய்ய ஆர்வத்தோடு இருப்பார்கள். இவர்களைக் குறிவைத்து பல்வேறு டயட் முறைகளும், நியூட்ரீஷியன் ப்ராடக்ட்டுகளும் பெருகிவருகின்றன.

சமீபகாலமாக, பேலியோ டயட் குறித்த ஆர்வம், நிறையவே பெருகிவருகிறது. உடல் பருமனைக் குறைக்கவும், உடலிலுள்ள ரத்தம், கொழுப்பு போன்றவற்றை சரிசெய்யவுமாக பல்வேறு காரணங்களுக்காக பேலியோ டயட்டுக்கு முயற்சி செய்கிறார்கள். பெரும்பாலும் செவிவழிச் செய்தியாகவும், ஒருவரைப் பார்த்து, அவர்மீதான நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த டயட்டை முயற்சிக்கிறார்கள். பொதுவாக, மருத்துவர்கள் பேலியோ டயட்டை பரிந்துரை செய்வதில்லை. பேலியோ டயட்டின்மீது ஆர்வம் கொண்ட குழுவினரோடு தொடர்புகொள்பவர்களுக்கு, அதன்மீதான ஆர்வமும், நம்பகத்தன்மையும் ஏற்படுவதால் அவர்களும் அதில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பேலியோ டயட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பதுகுறித்த ஆய்வு முடிவுகள் எதுவும் முழுமையாக இல்லை. அனைத்தும் பரீட்சார்த்த முறையிலேயே இருப்பதால் இது நல்லது... அல்லது கெட்டது என்றெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதன்காரணமாகத்தான் பெரும்பான்மை மருத்துவர்கள் இதனை பரிந்துரைப்பதில்லை.

பேலியோ டயட் உணவுமுறைக்கு மாறுபவர்கள், அவர்களுக்கு டயட் அவசியமா? உடல்நலத்துக்கு ஒத்துக்கொள்ளுமா என்பது குறித்தெல்லாம் தீர்க்கமாக உடல்நலப் பரிசோதனைகள் செய்யத் தவறும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் கடுமையாக இருக்கிறது. முறையான பேலியோ டயட்டீஷியன் யார் என்பதிலும் தடுமாற்றங்கள் இருக்கிறது. பேலியோ டயட் போலவே இன்னும் பல டயட்டுகளை மருத்துவர்களாக அல்லாதவர்களே முன்னெடுக்கிறார்கள். அதேபோல், நியூட்ரீஷியன் என்ற பெயரில், குறிப்பிட்ட சில ப்ராடக்ட்டுகளை விற்பனை செய்யும் நோக்கில், அந்த நிறுவனங்கள், பல்வேறு குழுக்களை உருவாக்கி, தங்கள் ப்ராடக்ட் குறித்து வியாபாரரீதியாக மூளைச்சலவை செய்து விற்பனையில் இறங்குகின்றன. இவற்றையும் எந்த மருத்துவரும் பரிந்துரை செய்வதில்லை. முழுக்க முழுக்க மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போன்ற உத்தியில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே உடல்நலம் சார்ந்து எதையேனும் உட்கொள்ளும்போதோ, டயட்டில் இருக்கும்போதோ அதுகுறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் நேர்மைத்தன்மையும் இதில் முக்கியம். உடல்நலம் பேணுவது அவசியம்... அதே நேரம், போலித்தனமான வியாபார உத்திகளில் சிக்கிடாமல் இருப்பதும் அவசியம்.

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

29/10/2022

நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, தூதுவளை தோசை, தூதுவளை ரொட்டி, தூதுவளை அடை என்ற ரெசிபிகளும் வீட்டில் பெரியவர்கள் செய்கிறார்கள்.

தூதுவளையை எப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்பது குறித்து பார்ப்போம். தூதுவளையில் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். இதனை சாப்பிட்டால் உடல் தேறும். தூதுவளை இலையைப் பறித்து கவனமாக சுத்தம் செய்து அதில் முட்கள் நிறைந்து இருக்கும் அதனை கைகளில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தூதுவளைக் கீரையை-ஒரு கப்
பச்சரிசி-ஒரு கப்
புழுங்கல் அரிசி-அரை கப்
சீரகம்-ஒரு டீஸ்பூன்
மிளகு-ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்-ஒரு டீஸ்பூன்
வர மிளகாய்-காரத்துக்கேற்ப
உப்பு- தேவைக்கேற்ப
நெய்-தேவைக்கேற்ப

பச்சை அரிசி, புழுங்கல் அரிசியை ஊற வைத்த தண்ணீர் அதிகம் விடாமல் அரைத்து தூதுவளையை சுத்தம் செய்து அதனை அரைத்துக்கொள்ளவும். பிறகு வரமிளகாய் சேர்த்து அரைக்கவும். பிறகு சீரகம் மிளகு இடித்துப் போட்டு தேவையான அளவு உப்பு கலந்து இறுக்கமாக பிசைந்து அதை மெல்லியதாக தட்டி தோசைக்கல்லில் நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள். இவ்வாறு செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அதனை வீணாக்காமல் சாப்பிட்டு முடிக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இக்கீரையை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு நாட்களாவது இதை உணவில் சேர்த்து வந்தால் நினைவு திறன் மேம்படும். ஆண்கள் தூதுவளைக் கீரையை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

உடல் வலுப்பெறும். ஜீரணக் கோளாறால் அவதிப் படுபவர்களுக்கு செரிமான பிரச்சனை தீரும். இருமல், இளைப்பு பிரச்சனை உள்ளவர்கள் தூதுவளைக் கீரையை சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் கபத்தைக் கரைத்து வெளியேற்றும். காதுவலி போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
#அளவுக்கு_மிஞ்சினால்

08/10/2022

#அளவுக்கு_மிஞ்சினால்...
⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்.
⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.
⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.
⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.
⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.
⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

Wollen Sie Ihr Service zum Top-Schönheitssalon in Berlin machen?
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Webseite

Adresse


Berlin