Susan Moore

Susan Moore

Share

Simple choices to solve your worries, everything becomes easy! மனங்களைத் தழுவிடும் மயிலிறகின் வருடல்கள் இவை

12/06/2025
Photos from Susan Moore's post 07/01/2025

Head-to-toe pampering

Photos from Susan Moore's post 07/01/2025
07/01/2025

Common pain, soreness and swelling, people always think that there is no better way to solve it, but now we have newer scientific and technological achievements, it is worth trying!
https://cadgood.shop/products/caamy-1

Photos 30/10/2015

யாழ் முஸ்லிம்களுக்கு...
கால் நூற்றாண்டு
கரைந்து போனது வெறும்
கண்ணீரினில்....

90 ஒக்டோபரின்.......
இழப்புக்களைப் பேசிப் பேசியே.....
நம்
இளமையும்
நரை கண்டு போனது

இன்னும்.....
சிதைக்கப்பட்ட நம் மனைகள்...
வெயிலில் கருகி
மழையில் அழுகி
விலாசம் சுமக்கின்றன .
நம் கடந்த காலத்தை

அன்று...
வணிகச் செழிப்பில்
கனிந்த நம் சமூகம்
இன்று..
அங்காடிகளில்
அல்லாடிகளாய்
அவலம் சுமந்து....
அவனிக்கும் பாரமாய்..
அந்தரிக்கின்றது..

நாமோ...
சிறுபான்மையானதில்
அகதிக்கறை கழுவப்படாமலே
வறுமைச் சமூகமாய்
வேரறுக்கப்படுகின்றோம்
பெரும்பான்மை நிலங்களில்..

அன்றைய
இனச்சுத்திகரிப்பின்
கரகோஷம்...
இன்னும்....
நிவாரணமின்றியே
அரங்கேற்றப்படுகிறது
வெறும் கோஷங்களாய்

இங்கே
மீளாத் துயரில்
வாழ்க்கை யதார்த்தம்..
மந்தகதியிலோ
மீள் குடியேற்றம்...

அன்றைய
திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பின் எச்சங்களாய்
அடையாளமிழக்கப்பட்ட
சோனக சமூகம் நாம்...

வெறும் கருவாகி
பேசு பொருளாகின்றோம்
ஒவ்வொரு
கறுப்பு ஒக்டோபரிலும்...

Photos 30/10/2015

தனிமையி லிருக்கும்
பெண்களிடம்
கனிவாய் மொழி பேசி
துணையாய் வேடமிடும்
முகம் காணா
முகநூல் ஆண்களுக்கும்
சாட்டையடி...

இரவில் விழித்திருந்து
நறவுக் காதலால்
உறவாகி..
காலம் கடந்த பின்
பெண்
காட்சி மாற்றும் காளைகளுக்கு..
கைப் பூட்டினி...

வாட்ஸ்அப்
வைபர்...
இன்னும் பல இணைப்பில்
பருவத்தை ஏலமிடும்
சலனங்களுக்கினி
துருப்பிடித்த
சங்கிலிப் பூட்டு...

சட்டம்
இனி மெல்லக் கரைக்கும்
விரட்டும்
அன்பைத் துகிலுரிக்கும்
துச்சாதனன்களை...

பத்தினிகளைப்
பாவங்களாக்கும்...
இந்தக் கடலைகளுக்கு
தீக்குள் வேக வைக்க...

இதோ...
நம்பிக்கை வேட்டு

Want your business to be the top-listed Beauty Salon in London?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


London