GRT Ayruvedic Oil Massage
massage
09/08/2023
17/12/2021
கால்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்...!
கால்களுக்கு மசாஜ் செய்வது பண்டைய காலங்களிலிருந்து இன்றியமையாத ஆரோக்கியமான உடற்பயிற்சி ஆகும். கால் மசாஜ்களுக்கு ஆயுர்வேதம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. சரியான வழியில் மசாஜ் செய்வதால் உங்கள் நரம்புகளை தூண்டுகிறது, இது உங்கள் மனதையும் உடலையும் மேம்படுத்தி தளர்வான தசைகள், பதற்றம் மற்றும் வலியை குறைக்கிறது. இதற்காக நீங்கள் கடினமாக எதுவும் செய்ய தேவையில்லை, எளிமையாக மசாஜ் செய்தால் போதும். பாதங்களோடு தொடர்புடைய உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளுக்கும் அற்புதங்கள் நடக்கும்.
கால்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்...!
23/08/2021
முன்பெல்லாம் எண்ணெய் குளியல் என்பது மக்களின் அவசியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும். சருமம் அழகு பெறும். ரத்த ஓட்டம் சீரடையும். ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் சூடு அதிகமாவதன் விளைவாக சருமத்தில் பருக்கள், கட்டிகள், கொப்புளங்கள் கிளம்பும். ஸ்ட்ரெஸ் அதிகமிருக்கும் போது, அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீவிரமடையும். இதனால் வாரம் தவறாமல் மசாஜ் செய்துகொள்கிறவர்களுக்கு முதுமைத் தோற்றம் தள்ளிப் போய், இளமை நீடிக்கும்.
எண்ணெய் குளியல் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஜலதோஷம் பிடிக்குமோ என்கிற பயம். இவர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு தலையை நன்கு காய வைத்து, ராஸ்னாதி சூரணத்தில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு சிட்டிகையை எடுத்து, உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து விட்டால் போதும். மண்டைக்குள் இருக்கும் நீரையெல்லாம் அது எடுத்து விடும். சளி பிடிக்காது.
அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் நிறைய வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறீர்கள் மிக்க நன்றி ஆனால் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் இந்த மசாஜ் என்பது ஆயில் மசாஜ் இது வந்து உடலில் உள்ள உடல் களைப்பு உடல் வலி ரத்த நாளங்கள் இவைகளை சீரமைப்பதற்காகத்தான் இந்த மசாஜ் ஆனால் நிறைய தோழர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் அந்த தவறான கண்ணோட்டத்தில் யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் நீங்கள் கேட்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நிறைய தோழர்கள் பெண் வருவார்களா வீட்டுக்கு அவர்கள் வந்து மசாஜ் செய்வார்களா என்று ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் மிகவும் சங்கடமாக உள்ளது தயவுசெய்து மசாஜ் செய்ய வேண்டும் என்று விரும்பும் சகோதரர்கள் தயவு செய்து தவறான கண்ணோட்டத்தில் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன் அதே போன்று வெளியூர்களிலிருந்து தொடர்பு கொள்கிறார்கள் இப்போது சென்னையில் மட்டுமே எங்கள் சேவை இருக்கிறது விரைவில் வெளியூர் வந்து செய்வதற்கான முயற்சிகள் எடுக்கிறோம் அனைவருக்கும் ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி
19/02/2021
இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.
மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், லாக்டிக் ஆசிட்' சேரும். மசாஜ், தசைகளில் சேரும், லாக்டிக் ஆசிட்'களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
ரத்த ஓட்டம்: மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
செரிமான மண்டலம்: வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.
இதயம்: முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.
மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.
19/02/2021
Chennai person only
Cantact: 9080392466
19/02/2021
19/02/2021
மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
மசாஜ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால். மசாஜ் கிளப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மசாஜ் தரும் பலன்கள் அதிகம் என்கிறார்கள் உடலியக்க நிபுணர்கள்
அதன் பலன்களை பார்க்கலாம்...
சருமம்:
சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.
தசைகள்:
தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.
இரத்த ஓட்டம்:
மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது. ஒட்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தத்தின் திறன் அதிகரித்து, அதன் பயன்
கூடுகிறது.
நரம்புகள்:
இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென் மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.
ஜீரண மண்டலம்:
கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய்
எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தும் படுகிறது
சிறுநீரக மண்டலம்:
சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
இதயம்:
முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும் மசாஜ் செய்வதற்கு ஆயில் முறையே சிறந்தது...
உங்கள் இல்லத்திற்கு வந்து மசாஜ் செய்யப்படும்
சென்னை மட்டும்
தொடர்புக்கு:
9080392466
07/12/2020
தினமும் நைட் தூங்கும் முன் பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?
உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அதற்கான முக்கியத்துவம் கொண்டது. இதில் பாதங்கள் விதிவிலக்கல்ல. ஆயுர்வேத பாரம்பரியத்தில் பாதங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உடலும் ஆன்மாவும் ஒரு நபரின் பாதங்களில் தான் இணைகிறது என்பது பழங்கால நம்பிக்கை. அதனால் பாதங்களுக்கு தனி கவனம் கொடுக்கப்பட்டு வந்தது
உங்கள் பாதங்களுக்கு தேவையான பராமரிப்பு வழங்குவதில் பாத அப்யங்கம் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆயுர்வேத எண்ணெய் கொண்டு பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் நரம்பு அழுத்தம் நீக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
பாத மசாஜ் செய்வதன் சிறப்புகள் என்ன?
ஆயுர்வேதத்தின் படி பாதம் உடலின் முக்கிய உறுப்பாக பார்க்கப்படுகிறது. பல்வேறு உறுப்புகளின் நரம்புத் தொடர்கள் பாதங்களில் முடிவுறுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் அந்த நரம்புகள் புத்துணர்ச்சி அடைவதோடு, வலிமை அடைகின்றன. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் இதர உறுப்புகளும் வலிமை அடைகிறது.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் பாத அப்யங்கம் செய்வது நல்ல பழக்கம். தினமும் இந்த சிகிச்சையை பின்பற்றுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. மற்ற சிகிச்சைகளுக்கு அன்னையாக திகழ்வது பாத அப்யங்கம். தோஷ சமநிலையை கொடுக்கும் ஆற்றல் இந்த சிகிச்சைக்கு உண்டு.
பாத அப்யங்கம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:
1. நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து தன்னுடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது.
2. டென்சன், பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்குகிறது.
3. அலைபாயும் மனதிற்கு அமைதியைத் தருகிறது.
4. ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது
5. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
6. கண்பார்வை மேம்படுகிறது
7. காது கேட்கும் திறன் மேம்படுகிறது
8. பாத வெடிப்பை தடுக்கிறது மற்றும் குணமாக்குகிறது
9. பாத ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
10. பாத வலிக்கு சிகிச்சை அளிக்கிறது
11. சரும வறட்சி மற்றும் கடினத்தன்மையைப் போக்குகிறது
12. உடல் பாதிப்பை ஊக்குவிக்கும் வாத தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது.
பாத அப்யங்கம் செய்யும் முறை :
நோயாளிக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் சான்று பெற்ற மருத்துவர் மட்டுமே இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.
முதல் நிலை : எண்ணெய் தேர்வு
தைலம் என்ற ஆயுர்வேத எண்ணெய் கொண்டு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதுமருத்துவ எண்ணெய் அல்லது மருத்துவ நெய் அல்லது சில நேரம் இரண்டையும் சேர்த்து கலந்து இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது.
சில நேரங்களில், பால், லக்ஷ சுரணம் மற்றும் தசமுலா காஷயம் ஆகியவற்றை இணைத்து தயாரிக்கப்படும் ஷீரோதாரா என்பதும் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் நிலை : எண்ணெய் தேய்ப்பது
மருத்துவ எண்ணெய்யை சிறிது நேரம் சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான எண்ணெய் அல்லது நெய்யை எடுத்து குதிகால், பாதம், கணுக்கள் மூட்டு , மற்றும் கால் முழுவதும் தடவவும்.
மூன்றாம் நிலை : மசாஜ் செய்வது
எண்ணெய் தடவிய பின் முக்கிய செயல்பாடு தொடங்குகிறது. எண்ணெய் தேய்க்கப்பட்ட சருமத்தில் கைகளால் அழுத்தமில்லாமல் அதே நேரத்தில் வேகமாக மசாஜ் செய்ய வேண்டும்.
நரம்புகள் மற்றும் ஆற்றல் குறிகளை ஊக்குவிக்கும் படி, மசாஜ் செய்பவர்கள் குறிப்பிட்ட பகுதியில் லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த செயல்பாடு எதிர்மறை ஆற்றல் மற்றும் கழிவுகளை உடலில் இருந்து அகற்றி நேர்மறை தாக்கத்தை உண்டாக்குகிறது.
சில முக்கிய குறிப்புகள்
ஒரு நாளின் எந்த நேரத்திலும் பாத மசாஜ் செய்யலாம். ஆனால் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பாத மசாஜ் செய்வது நல்லது. இரவு நேரத்தில் உங்கள் உடலை தளர்த்திக் கொள்வதால் உடலின் முக்கிய குறிகள் ஊக்குவிக்கப்படும்.
சர்வ அப்யங்கம்" என்னும் முழு உடல் மசாஜ் செய்யும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பாத அப்யங்கம் பார்க்கப்படுகிறது.
பாத மசாஜ் செய்வதை வழக்கமாகிக் கொள்வதால் உடல் புத்துணர்ச்சி அடைந்து பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
யாரெல்லாம் செய்யக்கூடாது?
சில குறிப்பிட்ட உடல் நிலையில் பாத அப்யங்கம் செய்வது நல்லதல்ல. சளி, காய்ச்சல், இரத்த தொற்று, அஜீரணம், வயிற்று கோளாறுகள், சரும பாதிப்புகள், இரத்த ஓட்ட கோளாறுகள் போன்ற பாதிப்புகள் இருக்கும் போது இந்த சிகிச்சை ஏற்புடையது அல்ல.
தொடர்புக்கு:
9080392466
சென்னை மட்டும்
23/10/2020
தொடர்புக்கு:
9080392466
சென்னை மட்டும்
23/10/2020
இயற்கை மருத்துவ முறையில் பிரதானமானது மசாஜ். மசாஜ் செய்வதால் தோலில் ஏற்படும் நன்மைகள் இணையற்றது.
மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறும்.
மசாஜ் தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது.
கடினமான வேலைகளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். மசாஜ் தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட்களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மசாஜ் செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.
மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும்.
ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் மசாஜ் நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
ஆயுர்வேத ஆயில் மசாஜ்
ஹோம் சர்வீஸ்
தொடர்புக்கு:
9080392466
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Chennai
