Metamorphosis
An organization guiding and helping the student community with our powerful motivational and various
17/05/2014
தெரிந்தது...
ஸ்டாக் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் இல்லை என்ற பதிலே ரேஷன் கடையில் கிடைக்கும். இனி, இப்படி ஏமாற்ற முடியாது.
ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால், அன்றைய சரக்கிருப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
எஸ் எம் எஸ் அனுப்பும் முறை :
குடும்ப அட்டைதாரார்கள் ( பிடிஎஸ் ) - இடைவெளி -- மாவட்ட குறியீடு -- இடைவெளி - கடை எண் என்ற முறைய்யில் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். உதாரணமாக பிடிஎஸ் 01 பி இ 014 என்று அனுப்பவேண்டும்.
குடும்ப அட்டையில் உள்ள எண்ணில் முதல் இரண்டு எழுத்துகள் மாவட்ட குறியீடு எண். இது போல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது.
எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்கள் 97890- 06493, 97890-05450, 01764-80226, 91764-80527, 91764-80216 என்ற மொபைல் எங்களில் ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பலாம். உடனே பதில் கிடைக்கும்.
17/05/2014
Remember today, for it is the beginning.
Today marks the start of a brave new future.
17/05/2014
அச்சச்சோ தப்பு...
அச்சச்சோ தப்பு. பண்ணிட்டனே ! மனிதர்களைப் போலவே சிந்திக்கும் எலிகள்.
வாஷிங்டன் : ஏதேனும் ஒரு செயல் தவறாக நடந்து விட்டால் அது குறித்து மனிதர்கள் சிந்திக்கும் விதமும், எலிகள் சிந்திக்கும் விதமும் ஒரேமாதிரியாக இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்தவறுகளுக்கு மாற்றாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது குறித்து மனிதர்களின் மூளைகளும், எலிகளின் மூளைகளும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கின்றன.
மோட்டார் கார்டெக்ஸ் எனப்படும் மூளையின் இயக்க மேற்பட்டைப் பகுதியில் இச்சயல்பாடுகள் நிகழ்கின்றன. இந்த ஆய்வில் மனிதர்களும், எலிகளூம் தவறுகளுக்காகத் தகவமைக்கும்போது எப்படி மிக எளிதாக நேரத்தைக் கணக்கிட்டுச் செயல்படுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. மனிதர்களின் தகவமைப்புக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து மேலும் அறிவதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்லனர்.
இந்த ஆய்வுகள் ஓசியு, மன அழுத்தம், ஏடிஎச்டி, முடக்குவாதம் போன்ற மூளை சார்ந்த நோய்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17/05/2014
The unhappiest people in this world are the people who
care the most about what everyone else thinks.
நர்சரிப் பள்ளி ஒன்றில்...
நர்சரிப் பள்ளி ஒன்றின் உணவு அறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், ' ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் ' என எழுதி இருந்தது. அங்கு தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது : ' என்னளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
அகண்ட முகம் !?
அகண்ட முகங்களிடம் ' அலர்ட்' டா இருங்க!
மனிதர்களின் முக அமைப்பு, மச்சங்கள், விரல்களின் நீள அகலங்கள் போன்றவைகளை மையமாகக் கொண்டு, அவர்களுடைய குணாதிசயங்களை பட்டியலிடும் ஆய்வுகள் உலகமெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு, அகண்ட முகம் கொண்ட ஆண்கள் அதிகம் பொய் பேசுவார்கள் என அதிர வைக்கிறது.
லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வில் 150க்கும் அதிகமான ஆண்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் ஆன்லைனில், தாயம் ( டைஸ் ) உருட்டச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிகளவில் டிக்கெட் வாங்க ஆசைப்பட்டு, கலந்துகோண்ட ஆண்களில் 5ல் ஒருவர் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி பொய் சொன்னவர்களில் பெரும் பாலானோர் அகண்ட முகம் கொண்டவர்கள்.
' நீண்ட முகத்தை காட்டிலும் அகண்ட முகம் கொண்டவர்கள் அதிகம் பொய் பேசுபவர்கள், மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் என்பது எங்களின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு மோசடி பேர்வழிகளை பார்த்தவுடனே அடையளம் கண்டு கொள்ளலாம் ' என்கிறார் இந்த ஆய்வை நடத்திய செரில்மெக்காமிக்.
17/05/2014
இந்தியப் பிரதமர் (நியமனம் .அதிகாரம் மற்றும் பணிகள்
என்ன????
இந்தியப் பிரதமர்:
(ஆங்கிலம்: Prime Minister Of India) இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் ..................................?
பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்
பிரதமர் நியமனம்
பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[3].
அதிகாரங்கள் மற்றும் பணிகள்
பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கினைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[4].
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
முக்கிய இராணுவ விடயங்கள்.
பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றதில் பதிலளித்தல்.
பிரதமரின் தேசிய நிவரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:
பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலக முகவரி:
சவுத் பிளக், ராய்சினா ஹில்,
புது டில்லி, இந்தியா - 110 011,
தொலைபேசி: 91-11-23012312.
இந்தியாவின் இரு முக்கிய செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு பொன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[5].
பிரதமரின் தேசிய நிதிகள்
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].
பிரதமரின் தேசிய இராணுவ நிதி
இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.
இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].
பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சாரிலால் நந்தா, ஐ. கே. குஜரால், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள்.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) உத்தரப் பிரதேச மாநில அலகாபாத் நகரில் பிறந்தவர்கள்.
இந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்.
ஜவஹர்லால் நேரு:
இந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்க்கள்.
குல்சாரிலால் நந்தா:
இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.
லால் பகதூர் சாஸ்திரி:
இவர் 582 நாட்க்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளி நாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.
இந்திரா காந்தி:
முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்க்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.
மொரார்ஜி தேசாய்:
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.
ராஜீவ் காந்தி:
41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவராவார்.
பி. வி. நரசிம்ம ராவ்:
தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.
அடல் பிஹாரி வாஜ்பாய்:
இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியை சேராத தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.
மன்மோகன் சிங்:
இவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.
மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:[7].
17/05/2014
You are the BEST
when
YOU ARE YOU!!!
16/05/2014
Worrying won't stop the bad stuff from happening it just stops you from enjoying the good.
16/05/2014
16/05/2014
The Pupula duplex is a medical oddity that is characterized by having two irises/ pupils in each eyeball.
16/05/2014
வெற்றி ஒன்றே இலக்கு!!!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Chennai
600092
