SIVA Tutorial

SIVA Tutorial

Share

health மற்றும் உடல் நலம் போன்ற சில டிப்ஸ்

05/01/2021
Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக் 05/10/2018

மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது ஒரு ஆப்லைனில் நம்முடைய வெப் மெயிலை அக்சஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் லைன் டூல் ஆகும்.

இந்த டூல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 உடன் கிடைக்கிறது.

Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக் மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது ஒரு ஆப்லைனில் நம்முடைய வெப் மெயிலை அக்சஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் லைன் டூல் ஆகும். .....

Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்) 02/10/2018

விர்ச்சுவல் பாக்ஸ் என்பது ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் (Open source) சாப்ட்வேர் ஆகும்.

Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்) Oracle Virtual Box விர்ச்சுவல் பாக்ஸ் என்பது ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் (Open source) சாப்...

22/07/2018

கடன் குறியீட்டெண் (Credit score) தெரியுமா?
நம்மில் பலர் அடிக்கடி வங்கியில் கடன் பெறுபவர்களாக இருப்பார்கள். முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்கச் சென்றால் நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள அனைத்து வங்கிகளிலும் தடை இல்லாச் சான்று வாங்கி வரச் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு கேட்பதில்லை. வங்கி மேலாளர் உடனே கணினியை தட்டி உங்கள் கடன் குறியீட்டெண் என்ன என்று பார்த்து விட்டு உங்களுக்குக் கடன் வழங்குவது குறித்து முடிவெடுப்பார். இதை எப்படிச் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் விபரங்கள்
உங்கள் விபரங்கள் ஒருவர் வங்கியில் கடன் பெற்று அதனை எவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளார் என்பது குறித்த விவரங்களை வைத்து உங்களுக்கு ஒரு குறியீட்டெண் கொடுக்கப்படுகிறது. அந்த எண் தரவரிசையை வைத்து உங்களுக்கு வங்கிக் கடன் வழங்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து வங்கி முடிவு செய்கிறது.

கடன் செயலகங்கள்
கடன் செயலகங்கள் இதற்கென்று சில கடன் மதிப்பீட்டு முகவர்கள் சில கடன் செயலகங்களின் கீழ் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வங்கிகளும், கடன் தரும் நிறுவனங்களும் அவர்களிடம் கடன் பெற்றோர் விவரங்களைக் கொடுத்து மதிப்பீடுகளை ஆன்லைனில் பெற்று முடிவெடுக்கிறார்கள்.

இப்படிதான் நடக்கிறது..
உதராணமாக, நீங்கள் ஏதாவதொரு வங்கியில் கார் வாங்கக் கடன் பெற்றீர்கள் என்றால், உங்களின் கடன் திருப்பிச் செலுத்தும் சக்தி, கடனைத் தவணை தவறாமல் செலுத்திய விவரம், கடன் குறித்த விவரங்கள் ஆகியவற்றை அந்த வங்கி இந்தக் கடன் செயலகத்திற்கு வழங்கும். அவர்கள் இதற்கான கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு குறியீட்டெண் வழங்குவார்கள். நீங்கள் தவணை தவறாமல் செலுத்தியிருந்தால், உங்கள் கடன் குறியீடு நல்ல நிலையைக் காட்டும். அதே நேரத்தில், உங்கள் தவணை செலுத்தியதில் ஏதாவது குறைகள் இருந்தால், உங்கள் கடந்த கால நிலை குறித்து உங்கள் கடன் குறியீடு சற்று மதிப்பு குறைந்து காட்டும். உங்கள் கடன் வரலாறு குறித்த விவரங்கள் இல்லையென்றாலும் உங்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகள் சுணக்கம் காட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கண்காணிப்பு
கடன் செயலகங்கள் உங்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதை மட்டும் ஆராய்வதில்லை. வங்கிகளில் கடந்த காலங்களில் நீங்கள் காலம் தாழ்த்தி தொகை செலுத்திய நிகழ்வுகள், கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய நிகழ்வுகள் பிற கடன் திட்டங்கள் அதாவது நகைக்கடன் கல்விக்கடன், தனிக்கடன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வங்கிகளிடமிருந்து பெற்று உங்களைப் பற்றி மதிப்பிட்டு உங்களுக்குக் குறியீட்டெண் வழங்குகிறது. அந்த எண் குறித்த விவரங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இந்த விவரங்கள் தேவைப்படும் வங்கிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்படுகிறது.

மதிப்பெண்கள்
உங்கள் கடன் குறியீடு 300 முதல் 600 வரை இருந்தால் நீங்கள் கடன் பெற முடியாத அபாய எல்லைக்குள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கடன் குறியீடு 700 மற்றும் அதற்கும் மேலிருந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கக் கூடும். நாணயமும், நேர்மையும் நாணயமும், நேர்மையும் உங்கள் நாணயமும், நேர்மையும் மூன்றாவது நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டு உங்களுக்குக் கடன் வழங்கப்படுவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். நீங்கள் கடன் வாங்க விரும்பும் வங்கியில் மட்டுமல்ல உங்கள் பகுதியில் மட்டுமல்ல, நாட்டின் எந்த மூலையில் எந்த நிறுவனத்திடம் நீங்கள் கடன் வாங்கியிருந்தாலும் அந்த விவரங்கள் இவ்வாறான ஆய்விற்குட் படுத்தப்படுகின்றன.

அதெல்லாம் சரி, இந்த மதிப்பீடுகள் எல்லாம் என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு மட்டும்தானா? அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், மல்லைய்யாக்களுக்கும் இல்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் மட்டும் விழுந்து பயனில்லை. அரசாங்கத்தின் காதுகளிலும், நீதிமன்றத்தின் காதுகளிலும் கூட விழவேண்டும்தானே.

01/07/2018

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?
கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?
1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.

3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும்.

8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும்.

9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.

12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

01/07/2018

பான் கார்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.

பான் என்றால் என்ன?
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பான் கார்டின் முக்கியத்துவம்
ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும்.
பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள
எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம்.
இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும்.
நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும்.
ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும்.
அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும்.
இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.
பான் கார்டு முக்கியமா?
ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது.
பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு அறிக்கை
5. கிரெடிட் கார்ட் அறிக்கை
6. வங்கி பாஸ்புக் அறிக்கை
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
8. ரேஷன் அட்டை
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
10. பாஸ்போர்ட்
11. வாக்காளர் அடையாள அட்டை
12. ஓட்டுனர் உரிம அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
வாழ்விடத்திற்கான சான்றுகள்
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
3. வங்கிக் கணக்கு அறிக்கை
4. கிரெடிட் கார்டு அறிக்கை
5. வங்கி பாஸ்புக் அறிக்கை
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று
8. பாஸ்போர்ட்
9. வாக்காளர் அடையாள அட்டை
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
11. ஓட்டுநர் உரிம அட்டை
12. ரேஷன் அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

SIVA Tutorial health மற்றும் உடல் நலம் போன்ற சில டிப்ஸ்

HOW TO DESIGN YOUR PASSPORT SIZE PHOTO 5 MINUTES 06/02/2018

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வை ஸ்கேன் செய்து டிசைன் செய்வது எப்படி?

HOW TO DESIGN YOUR PASSPORT SIZE PHOTO 5 MINUTES How to design passport size photo in 5 minutes,5 நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பது எப்படி

HOW TO USE ANDROID APPLICATION IN WINDOWS SYSTEM 06/02/2018

ஆண்ட்ராய்டு ஆப் களை எப்படி விண்டோஸ் கம்ப்யூட்டர் இல் யூஸ் பண்ணுவது என்று தெரிந்துகொள்ளலாம்.

HOW TO USE ANDROID APPLICATION IN WINDOWS SYSTEM how to use android application on windows computer || ஆன்ட்ராய்டு அப்ப்ளிகேஷன் களை விண்டோஸ் கம்ப்யூட்டர் இல் யூஸ் செய்வது எப்படி என்று தெரிந்த.....

HOW TO IDENTIFY YOUR VOTER ID || HOW TO DOWNLOAD YOUR VOTER ID 03/02/2018

HOW TO IDENTIFY YOUR VOTER ID || HOW TO DOWNLOAD YOUR VOTER ID HOW TO IDENTIFY YOUR VOTER ID || HOW TO DOWNLOAD YOUR VOTER ID வோட்டர் ஐடி நம்பர் இல்லாமல் எப்படி உங்களுடைய வோட்டர் ஐடி-ஐ தெரிந்து கொள்வது மற்றும் வோட...

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai