Tapovana Wellness
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tapovana Wellness, Nail salon, 115 Dharga Road, Zamin Pallavaram, Chennai.
Chair, sofas and beds ( CSB)
*Resting or Rusting*
Eversince, the invention of chairs, sofas and beds , daily usage by all classes of society from super rich to poor.Apart from it's comfort, look , status it has also *creating a huge impact on the mind and physique of the human body*.It extend(prolong) the relaxed/resting experience and push people towards couching.
The chairs , sofas, cots made before 30 years were mostly made of wood, wire, thread and created a resistance against our bones, muscles and connective tissue of the body and most of the people used it minimally. *People never hesitated or felt low , when they used the ground *. Their body anatomy and physiology were synchronized for all sorts of body movements and it was very natural and evolutionary.
*The CSBs took people off the ground, couched , weakened the bones & muscles by removing the necessary resistance of the body and promotes poor metabolism.*
Limit the Use of CSBs for resting..*train your body in hard surfaces ... see the unlimited potential of your body!!*
- - - - - - - - - - - - - - - - - - - -
நாற்காலி, சோஃபாக்கள் மற்றும் படுக்கைகள் (CSB)
*ஆரேக்கியமற்ற ஓய்வு*
நாற்காலிகள், சோஃபாக்கள் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு சௌகரியம், தோற்றம், அந்தஸ்தைத் தவிர *மனித உடலின்,மனதிலும் உடலமைப்பிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. இது ஓய்வெடுக்கும் அனுபவத்தை நீட்டிக்கிறது மற்றும் மக்களின் இயக்கத்தை முடக்கியுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட நாற்காலிகள், சோஃபாக்கள், கட்டில்கள் பெரும்பாலும் மரம், கம்பி, கயிறு ஆகியவற்றால் ஆனது. அது நமது எலும்புகள், தசைகள் மற்றும் உடலின் இணைப்பு திசுக்களுக்கு தேவையான எதிர்ப்பை உருவாக்கியது. பெரும்பாலான மக்கள் அதை மிகக் குறைவாகவே பயன்படுத்தினர். *மக்கள் தரையைப் பயன்படுத்தும்போது ஒருபோதும் தயங்கவில்லை அல்லது தாழ்வாக உணர்ந்ததில்லை.*
* CSB கள் மக்களை முற்றிலும் முடக்கி, உடலின் தேவையான எதிர்ப்பை அகற்றுவதன் மூலம் எலும்புகள் மற்றும் தசைகளை பலவீனப்படுத்தியது. மேலும் மோசமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.*
ஓய்வெடுக்க CSB களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள்..*உங்கள் உடலை கடினமான பரப்புகளில் பயிற்றுவிக்கவும்... உங்கள் உடலின் வரம்பற்ற திறனைப் பார்க்கவும்!!*
கல்லீரல் குறித்து
விழிப்புணர்வு பதிவு..
மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் !
உழைப்பு என்று கூட சொல்ல முடியாது.
அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !
மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.
இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.
மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.
இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.
பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை
அனுப்பி வைக்கும்.
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை
செய்யவில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.
கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.
கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.
பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~
அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.
உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.
நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்
🩸🩸🩸 *ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க..*
*அருகம்புல்லை* எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை மோருடன் குடித்தால் *நீரிழிவு* குறையும். வாரம் ஒரு முறை எடுத்து வந்தால் *இரத்தம் சுத்தமாகும்.*
*உலர் திராட்சை* பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால், *ஹீமோகுளோபின்* பிரச்சனைகள் தீரும். அத்துடன், ஒரு நாளைக்கு மூன்று உலர் திராட்சை வீதம் 9 நாள் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவு கூடும்.
அதே போல் ஒவ்வொரு நாளும் நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் *மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் இதயநோய்* தீரும்.
*புடலங்காயின் இலைச்சாறு,* காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். தொடர் இருமல் தொண்டை வலி போன்றவையும் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.
கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். *முருங்கைக் கீரை* வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக் கீரை, புதினாக் கீரை, அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க *பீட்ரூட்* அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
*மாதுளைப்பழத்தில்* இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
*எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்* சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும்.
*நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*
மூலிகை மருத்துவம்
மலச்சிக்கல் நீங்க*
1. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.
2. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
3. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.
4. வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது.
5. முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்...
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். Tapovana wellness
06/04/2019
*SCIENTIFIC REASONS BEHIND UGADI FESTIVAL 🚩GUDI PADWA🚩*
*🚩HAPPY UGADI🚩*
*🚩GUDI PADWA🚩*
🚩TAMIL NEW YEAR🚩
🚩VISHU🚩
*🚩NEW YEAR 🚩*
▪ We Celebrate Ugadi and other regional new year festival but so many of us don't know the science behind it. It is not just any religious festival but it has so much of scientific fact behind it let me tell you the science behind you got the festival in sweet and short.
*UGADI FESTIVAL IS NOT JUST A CALENDER CHANGE, BUT UGADI IS A NATURE CHANGE.*
*▪ According to Hindu calendar Chandramana Ugadi (Chaitra Suddha Padhyami) is the beginning of New Year.*
▪ It is most commonly celebrated by Andhra Telugu speaking peoples and Karnataka Kannadigas. it is also celebrated by Maharashtra people who call Ugadi as Gudi Padwa.Tamil people celebrate 1 week later as the sun takes 7 days to reach the axis related to tamilnadu and kerala.
▪ 1 st January it's just a change of calendar date but there is nothing said to be occurs any scientific or astronomical events on 1st January.
▪ Let me explain you astronomical and scientific events of UGADI Festival.
Peoples who are living near Vindhya Hills can observe Chandramana.
*ASTRONOMICAL EVENTS OF UGADI*
▪ The world is Ugadi derived from Sanskrit word Yuga-adi meaning Yuga means period adi means beginning. It means the beginning of new time.
▪ Today the Earth AXIS is tilted in such a way that Northern hemisphere received the highest amount of sun energy .And 7 days later it relates to kerala and tamilnadu
▪ It may be little discomfort for the humans because of high temperature but the earth gets charged.
▪ Speaking astronomical year the day before Ugadi is Amavasya.
▪ This means it is the last day of waning of Moon and the first day of waxing of moon. Which signifies the beginning of new time. Now you can observe by yourself it is the first day of Vasant Ritu means it is the first day of beginning of Spring season.
▪ From this day onwards trees plant start shedding their leaves and the new growth begans to appear.
▪ Even the nature also signifies the beginning of new time.
▪ Today the New Hindu calendar (Panchangam) begins.
▪ Hindu calendar is not just significant culturally but it is connected astronomical year and scientifically through describing the moments of Planet.
▪ According to our Indian great Mathematician Bhaskaracharya the Sun rise on the day of Ugadi is the beginning of New Year because the earth exactly complete it's one revolution around the sun.
*Rituals performed by the people on the day of Ugadi*
▪ On the day of Ugadi, People wake up before Sun rise they take a head bath with caster oil. People who celebrate ugadi will take head bath with Castor oil. Do you know the reason behind it here is the reason.
▪ As I told before Northern hemisphere receives highest energies of Sun and hence it a little bit inconvenient for a human to adapt high temperature so we use a cooling agent like Castor Oil taking bath with Castor oil is nothing but a preparation for the hottest period in this year.
▪ After this they starts decorating the house entrance with fresh mango leaves. And again there is a scientific reason behind it because the fresh leaves in the front of Home Alone the fresh air to come inside the home and it creates a sense of calmness.
▪ People wears New Clothes which creates a sense of new being inside their consciousness.
Other rituals that are performed on the day of Ugadi please see in the image below
*Swadesi Apnavo*
*Desh Bachao*
▪ Reflection in Ghee: Watching one’s reflection in a bowl of molten ghee.
▪ Enne (Oil) Shastra: Elderly women of the family applying Kumkum to the younger members and performing Aarti.
▪ Abhyang: Taking of oil bath by all members of the family.
▪ New Dresses: Wearing of new clothes by all family members.
▪ Abhyang for God's: Giving oil bath to the idols of Gods.
▪ Offering Flowers: Offering flowers of neem, mango and tamarind to the Gods.
▪ Offering Puja: Puja is offered following the steps of Abhisheka, Alankara, Naivedya and
Mangalarathi.
▪ Panchanga Pooje: After worshipping God,Panchanga for the new Samvatsara or Year is worshipped.
▪ Gudi or Indra thaja Pooja: Indra thaja Pooja is done next.
▪ Front door decoration : Decorating the front door with Kemmannu, (Red Earth), Rangoli and Mango leaves. Sometimes Neem leaves are also used.
*▪ Bevu Bella: Eating of Jaggery and Neem together in this festival to mark the presence of sweet and sour events in life's journey.*
▪ Oota: Offering meals to God and then eating Oota or meals as Prasada.
▪ Visiting temples: Visiting temples and seeking blessings of the Almighty God.
You are familiar with Ugadi Pachadi (Bevu bella mixture)
Do you know the scientific reason behind it??
*AYURVEDIC SCIENCE UGADI PACHADI (Bevu Bella mixture)*
Ugadi Bevu bella mixture have six different types tastes in it. It is also called as Shadruchulu meaning six tastes (ARISUVAI). Each ingredient will have different tastes.
▪ Jaggery - Sweetness.
▪ Tamarind - Sourness.
▪ Chili - Hot and Spiciness.
▪ Salt - Saltiness.
▪ Mango - Tanginess.
▪ Neem - Bitterness.
*Ingredients required*
▪ Jaggery - 1 Cup (Powdered).
▪ Mango pieces - 1 Cup (very fine pieces).
▪ Tamarind - 1 lemon size ( we usually use two ▪ cups water to extract the juice from tamarind).
▪ Red chili powder - 1 teaspoon.
▪ Green chili - ( very finely chopped pieces).
▪ Salt - a pinch
▪ Neem flowers - One tea spoon (rub them between your hands and seperated petals).
▪ Bananas - 2 (slice them in to pieces).
▪ Cardamoms - 3
▪ Grated coconut - one tea spoon
▪ Raisins - a few
▪ water - 1 cup
*Procedure of making*
▪ Mix all the above ingredients in a big bowl + Add 1 cup of water to it + Now blend every thing + Just crush bananas with your hands finally which will bring out really a wonderful taste.
*AYURVEDIC MEDICAL ADVANTAGES*
▪ In this Bevu bella mixture Neem has very special importantce. Neem has very much medicinal values. People call neem as "Pharmacy of Village".
▪ Neem has anti-bacterial, anti fungal, anti-toxin properties. Neem even used by villagers to cure chicken pox, also to treat viral fevers, malaria, diabetes mellitus.
▪ Neem also kills intestinal parasites.
Neem is also used in tooth pastes,soaps,cosmetics,manure,cow fodder and also in other products.
▪ Jaggery increases blood haemoglobin level, also provides additional energy for the body.
Sugarcane is the raw material used for production of jaggery which helps to develop strong teeth also fight against germs also fights against jaundice.
You have to say following shloka while consuming Bevu Bella mixture
(Shloka to be said while Consuming Bevu Bella mixture on Ugadi festival)
| |Shatayur Vajra Dehaya. Sarva Sampath
Karayacha. Sarva Rishta Vinashaya. I
Nimbakam Dala Bakshanam| |l
The meaning of above shloka is
"Let my body remain strong, like a diamond,
for a hundred years; O Lord, give me wealth
and prosperity; with the prayer that all the
bad in this world be destroyed, I eat this
mixture of neem buds and jaggery."
▪ That life is a mixed bag of sweet and sour and the sooner we learn to deal with the ups and downs with stoic equanimity, the better for us.
▪ The inner significance of this is to indicate that life is a mixture of good and bad, joy and sorrow, success and disappointment, and all of them have to be treated alike.
▪ All experiences have to be treated with I equanimity.
▪ Everyone should resolve to face calmly whatever happens in this year, accepting it with good grace. Consider everything is for one's own good.
▪ Men should rise above sorrow and happiness, success and failure.
▪ Auspicious days like Ugadi should be used for making resolutions to change our way of life and to purify our behaviour by giving up all bad qualities.
▪ Ugadi is a festival that teaches lessons ...
13/03/2019
கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?
எனக்கு அப்படி உட்கார்ந்து பழக்கமே இல்லை. இன்று கஷ்டப்பட்டு செல்போனில் டைமரை வைத்து எத்தனை நிமிடம் உட்கார முடிகிறது என பார்த்தேன். 15 நிமிடம் உட்கார முடிந்தது. இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் உயரத்தில் இருந்தன. கஷ்டபட்டு முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார்ந்தேன், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாது. முதுகு நேராக தான் இருக்கும்.
இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு.
நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான். அதற்கு முன் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து தான் உண்போம், உட்கார்வோம். வீட்டுக்கு யாராவது வந்தால் "ஜமுக்காளத்தை விரி, பாயை விரி" என தான் முன்பு சொல்வார்கள். இப்ப தான் சேர், சோபா.
நாற்காலி, சோபாவில் அமர்வதன் தீமைகள்
இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது.
இப்படி ஸ்பெஷல் நாற்காலி எல்லாம் வாங்கி முதுகுவலி குணமாகுமா என பார்ப்பது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். அதனால் வலி வரும் விகிதம் குறையுமே ஒழிய வலி வருவது நிற்கப்போவது கிடையாது.
ஜெரென்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.
ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழவைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு. ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு, இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணீக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.
கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழகாசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.
இம்மாதிரி கிழே உட்காருவது நாகரிககுறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம். சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்துபோன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில்தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகிவிடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரிக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.
ஓஸ்டியோபெரோஒசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத்தன்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.
அதனால் இதுநாள்வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து கீழே அமுக்கி விடுங்கள். இது காலின் அடக்டர் தசைகளை பிளெக்சிபிள் ஆக்கி போஸ்ச்ரசை சரி செய்யும்.
ஒரு நாள் உட்கார்ந்து எழுந்ததுக்கே முதுகை நன்றாக மஸாஜ் செய்தது போல இருக்கு. இந்த பதிவை தட்டச்ச நாற்காலியில் உட்கார்ந்தபின் நல்ல வித்தியாசம் தெரிகிறது.
சுகாசனம் செய்வோம்..சுகமாக இருப்போம். முயலுங்கள்...சோபா, சேர்களை தூக்கி கடாசுங்கள்.
---Selvan
Is smoking Injurious to Health?
Tapovana wellness
மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.
'அப்படியா... ஏண்டி?'
'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.
*மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர்*.
வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.
'என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, *பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்*... 'எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; *நான் தனியா உட்கார்ந்திருக்கணும்*. உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, 'அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...'
*இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர,* *பதில் என்னமோ மறுப்பு தான்*; பதில் என்னவோ அலுப்பு தான்.
முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழஅழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?
வங்கி, தபால் நிலையம்...
'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!' 'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!'
*எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும்*, *ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!*
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற *வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்*; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.
'எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.
அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
'என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...' என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.
*'எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்*; *நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க.*..' என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?
தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.
இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.
எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. *இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல*; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!
'எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.
*'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா*...' என வேண்டுபவனே நடைமுறையாளன்.
Tapovana wellness
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
115 Dharga Road, Zamin Pallavaram
Chennai
600043
