Dhanam beauty care
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhanam beauty care, Beauty, cosmetic & personal care, periyanayaki amman complex, thottipalayam pirivu, avinashi main Road, coimbatore, Coimbatore.
12/01/2022
New collections
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பாக்கியம்!
ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!
குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!
நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..
கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன் என்று சொல்வார்கள். முடி வளர்றதலாதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட் டுவியா என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான். விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள்.
இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான். அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான். குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள்.
யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்தாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன். அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார்.
அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ... உங்களுக்கு மரணதிசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள். தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக்கொள்வீர்கள்
பிறந்த குழந்தைக்கு 1,3, என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம். விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும்.
இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது. இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம்.
விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்யமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓம் நமசிவாய..
20/12/2018
*புருவ முடி திருத்துதல் (THREADING)
செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்! – அதிர்ச்சித் தகவல்.*
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்
கெடுத்துக் கொள்ளுகிறார்கள். எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும்கேடுகள் பற்றி என்னதான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்து விடுகிறது, என்றுகூறி ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.
மேலும் பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித் துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தை பற்றி பார்ப்போம்
புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் ஆயுளை தாங்களே குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள்என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.
*இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியு ள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்தவர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின்காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந் திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண் ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண் ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்தபுருவமுடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த
வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.*
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின் றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந் தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளைவுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.மேலும் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதா னம்.
இறைவன் உறையும் இடம் இதுவே இதை உணர்ந்து நம் நாட்டுக்கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
தற்போது அனைத்தும் மறைந்தும் மறந்தும் போய்விட்டது வேதனையே.
*🍀குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்.🍀*
குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள்.
குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.
*குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது?*
*நவக்கிரக குருவையா,*
*ஞான குருவையா?*
சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
*குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா?*
*இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?*
*தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.*
*அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.*
*நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.*
திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.
*அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை.*
*தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.*
‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம்.
*ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.*
உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள்,
ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.
*இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.*
ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை.
வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
*தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை*
*சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி.*
*கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.*
*இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்.*
*அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.*
ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.
ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.
*வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.*
*எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.*
*இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்?*
ஞான குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:
*குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:*
*குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம* *தஸ்மைஸீ*
*குருவே நம:*
இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் *‘குரு’* என்ற வார்த்தையை வைத்து *குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம்.*
குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.
*இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள்.*
ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு.
*இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான்.*
*குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி.*
*ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.*
இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் *குரு பகவான்.*
*குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும்.*
*குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.*
*திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.*
அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,
*இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.*
கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
வியாழக்கிழமைதான் என்றில்லை,
எந்த நாளிலும் அவரை வழிபடலாம்.
மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும்.
*ஞான குரு வேறு,*
*நவகிரக குரு வேறு* என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்
💐*ஓம்நமசிவாய*💐
சனி பகவானின் அனுகூலம் பெற இந்த இடங்களில் விளக்கு ஏற்றினால் போதும்...
சனிபகவான் ஒருவரின் வாழ்க்கையில் நுழைந்துவிட்டால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எல்லையே இருக்காது. ஏனெனில் சனிபகவான் நாம் செய்த பாவங்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுக்க வேண்டுமென சனிபகவானுக்கு சிவபெருமான் வரம் கொடுத்திருக்கிறார். எனவே அவர் நம்மை வதைப்பதில் இருந்து தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆனால் சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளது. சனிபகவானுக்கும், அமாவாசைக்கும் எப்பொழுதும் ஒரு தொடர்பு உள்ளது. அமாவாசை அன்று சனிபகவானை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பான ஒன்றாகும். இந்த பதிவில் அம்மாவாசை அன்று சனிபகவானை எப்படி வணங்கினால் உங்கள் வாழ்க்கையின் சிக்கல்கள் தீரும் என்பதை பார்க்கலாம்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
சனி அமாவாசை
அமாவாசை அன்று சனிபகவானை வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்றாகும், அதிலும் சனிக்கிழமை அன்று அமாவாசை வந்தால் அது மிக மிக சிறப்பாகும். அமாவாசை அன்று சனிபகவானுக்கு மட்டுமின்றி உங்கள் வீடுகளில் சில இடங்களில் விளக்கேற்றுவது கூட உங்கள் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் பாதுகாக்க உதவும்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
நுழைவாயிலில் விளக்கேற்றுதல்
சனி அமாவாசை அன்று விளக்கேற்றுவது உங்களுக்கு சிறந்த நன்மையை அளிக்கும். நிலவில்லாத அமாவாசை அன்று உங்கள் வீட்டில் இரண்டு விளக்கேற்றுவது சனிபகவானை மகிழ்ச்சியடைய வைக்கும். வீட்டின் வாசலில் இரண்டு புறமும் மண்விளக்கை ஏற்றி வையுங்கள். இது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்றி உங்கள் வாழ்க்கையில் கொண்டாட்டத்தை உண்டாக்கும்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
பூஜையறையில் விளக்கேற்றுதல்
உங்கள் வீட்டு பூஜையறையில் மணிவிளக்கு ஏற்றி வைப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை வழங்கும். இவ்வாறு விளக்கேற்றி வைப்பது உங்கள் இல்லத்திற்கு செல்வத்தை வழங்குவதுடன் உங்கள் இல்லத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
துளசி செடிக்கு அருகே விளக்கேற்றுதல்
துளசி மிகவும் புனிதமான ஒரு செடியாக கருதப்படுகிறது. துளசி மருத்துவ மற்றும் ஆன்மீக பலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அமாவாசைஅன்று அதற்கு அருகில் விளக்கேற்றி வைக்க தவறிவிடாதீர்கள். அமாவசை இரவு அன்று துளசி செடி அருகே விளக்கேற்றி வைப்பது உங்கள் வீட்டிற்கு கடவுளை அழைத்து வரும்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
மாடியில் விளக்கேற்றுதல்
உங்கள் வீட்டு மாடியில் விளக்கேற்றி வைக்க மறந்துவிடாதீர்கள். இது விளக்கேற்றி வைக்க மிகவும் முக்கியமான இடமாகும். அமாவாசை இரவு உங்கள் வீட்டு மாடியில் விளக்கேற்றி வைப்பது உங்கள் வீட்டிற்கு நல்ல சக்திகளையும், மேலும் வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் பெருகச்செய்யும்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
அரச மரம் அருகே விளக்கேற்றுதல்
உங்கள் வீட்டு அருகே அரச மரம் இருந்தால் அதற்கு அருகில் விளக்கேற்றி வைக்க மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்கு சனிபகவானால் ஏற்படும் பல பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். இதனை செய்யும்போது தூய்மையான மனதுடனும் நல்ல எண்ணங்களுடனும் செய்யுங்கள்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
ஏன் விளக்கேற்ற வேண்டும்?
நாம் செய்யும் ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாலும் ஒரு அறிவியலும், ஒரு புத்திசாலித்தனமும் இருக்கும். இவ்வாறு விளக்கேற்றுவதிலும் சில நன்மைகளும், அறிவியலும் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்
விளக்கேற்றுவதன் அர்த்தம்
விளக்கில் உள்ள எண்ணெய் நமது மனதில் உள்ள தீய எண்ணங்களான பேராசை, காமம், கோபம் போன்றவற்றை பிரதிபலிக்கிறது. இதில் இடப்படும் திரி மனிதர்களின் ஆத்மாவை பிரதிபலிக்கும். உங்கள் ஆத்மாவை கொண்டு இந்த தீய எண்ணங்களை அறிவு என்னும் நெருப்பு கொண்டு எரிக்கும்போது உங்களுக்கு வெளிச்சம் என்னும் ஞானம் கிடைக்க வழிவகுக்கும்.
🌷நாவிதரும் பண்டிதரும் 🌷
"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...
அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...
வேலையை ஆரம்பித்தார்...
'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...
பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...
"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"
இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.
கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...
அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.
அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்.
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்.
முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்.
அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்.
*"நம்முடைய அறிவும்.
*புத்தியும்.
*திறமையும்.
*அதிகாரமும்.
*அந்தஸ்தும்.
*பொருளும்.
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.
இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.
*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்.
*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது.
*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே.
*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை.
ஆகவே,
*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்.
*மதிப்போம்.
*வாழ்வளிப்போம்.
* படித்ததில் பிடித்தது.
வசம்பும்,,
குழந்தையும்..
வசம்பு பத்தி இப்போ எவ்ளோ பேருக்கு தெரியும்..
வசம்பெல்லாம் இப்ப யாரும் யூஸ் பண்ற மாதிரி தெரியல.. முன்னெல்லாம் குழந்தை பிறந்ததும் வசம்பு வாங்கிடுவாங்க.. குழந்தைக்கு ஏதாவது ஒன்னுன்னா உடனே டாக்டர்.. இங்கிலிஷ் மருந்து தான்.
ஆனா.. நீங்க வசம்பு ஒன்னு வீட்ல ஸ்டாக் வச்சிங்கன்னா டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமில்ல.. எப்படி.. படிங்க..🙂
வாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்கு..
வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது "பிள்ளை வளர்ப்பான்" என்றும் அழைக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள். இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர்.
வசம்பை கடிப்பதால்
பிறந்த குழந்தைகள் தங்கள் கையில் கட்டப்பட்டுள்ள வசம்பை கடிப்பதால் அதன் மருத்துவ சத்து உள்ளே நுழைந்து வயிற்று பிரச்சினைகளை விரைவில் களைகிறது.
வயிறு வீக்கம்
வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது.
பூச்சு நெருங்காமை
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சிகள் அண்டாது.
வாய்வு தொல்லை
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
பால் மட்டும் போதும்
வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும்.
இருமல்
வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும்.
மூளை வளர்ச்சி
இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.
வயிற்று போக்கு
வசம்பு, காயம், அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்...🙂
#தேங்காய்_பால்,
*வயிற்று புண்,
*உடல் சூடு,
*சிறுநீர் மஞ்சள் நிறமாக போகுதல்,
*வாய் புண்,
*வயிற்றுப் புண்,
நேரத்திற்கு சாப்பிடாமலும், அமிலத் தன்மை அதிகம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதும், அதிக காரம், அதிக புலிப்பு உண்பதும், சுத்தம் இல்லா ரோட்டுக்கடை உணவுகளே... வயிற்றுப் புண் வரக் காரணம், தினமும் இரவு உணவாக தேங்காய் பால் குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட எல்லா நோய்களையும் விரட்டியடிக்கக்கூடியது,
*உடல் சூடு/சிறுநீர் மஞ்சள் நிறமாக போகுதல்,
உடல் சூட்டின் காரணமாக சிலருக்கு வயிற்று வலி ஏற்படும், சிறுநீர் மஞ்சள் நிறமாக போவது, சிறுநீரகத்திற்கு நல்லதல்ல, எனவே உடல் சூடு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் அதிகாலையில் தேங்காய் பால் பிழிந்து குடிக்க வேண்டும்,
*வாய் புண்,
வாயில் புண், நாக்கில் புண், பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம், போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இரவு உணவாக தேங்காய் பால் குடித்தால் மறுநாள் காலையில் வாய் புண் ஆறிவிடும்.
"தேங்காய் சாப்பிடுவீர், மாத்திரைகளை தவிர்ப்பீர்."
திருப்பட்டூர்🙏🙏🙏🌺
உங்கள் தலையெழுத்து மாற வேண்டுமென்றால் அதனை எழுதிய பிரம்மன் கோவிலுக்கு தான் நீங்கள் செல்ல வேண்டும்.
நீங்கள் சென்று பிரம்மனிடம் மன்றாட வேண்டிய தலம் தான் திருப்பட்டூர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே 'விதி இருப்பின்' மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மை.
திருப்பட்டூர் வரலாறு
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.
அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.
திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம்.
04/06/2018
#திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!_*
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.
_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது
(y)
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Periyanayaki Amman Complex, Thottipalayam Pirivu, Avinashi Main Road, Coimbatore
Coimbatore
641014
