SDPI Tirupur south
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Tirupur south, Beauty, cosmetic & personal care, Tirupur.
03/12/2025
30/01/2025
*SDPI கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 29/1/2025 அன்று மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
SDPI கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர்
M. ஹாரிஸ் பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர்
A. முகமது ரபிக்
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயற்குழுவின் துவக்கமாக மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு அவர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
📌 இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-
♦️திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் SDPI IT WING மாவட்ட தலைவராக
M. நவ்ஷாத் அலி அவர்களும்,
மாவட்ட செயலாளராக
M.I நாகூர் மீரான் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
♦️மக்கள் தொகை பெருக்கத்தை கருத்திற்கொண்டும்,பெருகி வரும் குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டியும் பல்லடம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து திருப்பூர் சாலையில் அமைந்துள்ள அருள்புரம் பகுதியை தலைமையாக கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி இச்செயற்குழு வலியுறுத்துகின்றது.
♦️திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களான கஞ்சா,குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் பெட்டிக் கடைகளில் கூட சரளமாக விற்பனை செய்யப்படுகிறது.எவ்வளவு தான் காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.இதில் மாணவர் சமுதாயம் அதிகளவில் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.மேலும் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகும் சூழல் நிலவுகிறது. காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க செயற்குழு வலியுறுத்துகிறது.
♦️திருப்பூர் மாவட்டம் -63 வேலம்பாளையம் அருகே இடுவாய் பகுதியில் செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட நிர்வாகம் இது போன்ற செயல்படாத கல்குவாரிகளை கண்டறிந்து அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு 10 லட்சம் வழங்க வேண்டும் என செயற்குழு வலியுறுத்துகிறது.
இறுதியாக நன்றியுரையை
மாவட்ட பொருளாளர் முஸ்தபா அவர்கள் வழங்கினார்.
#பல்லடம்_வட்டம்_அறிவொளி_நகரை_சுற்றி_புதிதாக_அமையவுள்ள_மதுக்கடையின்_அனுமதியை_ரத்து_செய்ய_
#வலியுறுத்தி_திருப்பூர்_மாவட்ட_ஆட்சியர்_அவர்களைSDPI_கட்சியினர்_சந்திப்பு
இன்று 20/01/2022 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து பல்லடம் அறிவொளி நகரைச் சுற்றி அமைய உள்ள மதுக் கடைகளுக்கு அனுமதி மறுக்குமாறு மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் M.ஹாரிஸ் பாபு, மாவட்ட பொதுச்செயலாளர் I.மன்சூர் அஹமது, SDTU மாவட்ட செயலாளர் M.I.நாகூர் மீரான், பல்லடம் தொகுதி பொருளாளர் J.நாசர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
Tirupur
641602
