Amma Samayal

Amma Samayal

Share

Hi friends My New Youtube Channel Please Support My Channel friends�
https://youtube.com/channel/UC9gR7VfCMbgc4OjlWOSEoLA

04/10/2022

இட்லி தோசைக்கேற்ற அசத்தலான புதினா சட்னி செய்வது எப்படி | Mint Coriander Chutney Recipe in Tamil

சுவையான... புதினா சட்னி

புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். ஏனெனில் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமான பிரச்சனையை சரிசெய்யவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற என பலவாறு உதவியாக உள்ளன. எனவே இத்தகைய புதினாவை டீ போட்டு குடிப்பதை விட, அதனை சட்னி போல் செய்து, விருப்பான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இப்போது அந்த புதினா சட்னியின் செய்முறையோடு, அதனை எதனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து செய்து சாப்பிடலாமா!!!

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 4
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 சிறிய உருண்டை
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புதினாவை நீரில் அலசி, நீரில் இருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பருப்பானது பொன்னிறமானதும், அதில் வெங்காயம் சேர்த்து, வதக்க வேண்டும்.

பின் அத்துடன், புதினா மற்றும் புளி சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான புதினா சட்னி ரெடி!!! இந்த சட்னியை பலவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம். அது எவை என்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த புதினா சட்னியை விருப்பத்திற்கு ஏற்றவாறு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

சாதம்

மதிய வேளையில் சாதத்திற்கு சாம்பார், குழம்பு என்று சாப்பிட்டு போர் அடித்தால், புதினா சட்னியை செய்து, அதனை சாதத்துடன் சாப்பிடலாம்.

தோசை

தோசைக்கு புதினா சட்னி செய்து சாப்பிட்டாலும், அருமையாக இருக்கும்

இட்லி

பெரும்பாலானோருக்கு இட்லிக்கு இரண்டு மூன்று சட்னிகள் இருந்தால் தான் பிடிக்கும். எனவே அந்த சட்னிகளில் ஒன்றாக புதினா சட்னியையும் செய்து சாப்பிடலாம்.

வடை

காலை அல்லது மாலை வேளையில் செய்யும் வடைக்கும் புதினா சட்னியை தொட்டு சாப்பிடலாம்.

பிரட்

சாண்ட்விச் செய்யும் போது. புதினா சட்னியையும் அத்துடன் சேர்த்து செய்து சாப்பிட்டால், சாண்ட்விச்சின் சுவை சூப்பராக இருக்கும்.

சமோசா

சமோசாவிற்கு தக்காளி சாஸ் மட்டும் தொட்டு சாப்பிடாமல், புதினா சட்னியில் தொட்டு சாப்பிட்டால், சமோசாவானது மிகவும் சுவையாக இருக்கும்.

30/09/2022

இட்லி பொடி மிக சுவையாக செய்வது எப்படி | இட்லி பொடி இப்படி செய்துபாருங்க 10 இட்லி கூட காலியாகிவிடும்

சுவையான இட்லிப் பொடி செய்வது எப்படி?

சுவையான இட்லிப் பொடி செய்வது எப்படி?

எத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல், வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. அத்தகைய சுவை நிறைந்த இட்லி பொடியை வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்

சுவையான இட்லிப் பொடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
கறுப்பு எள் – 100 கிராம்
உளுந்தம் பயிறு – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 5 (பெரியது)
பெருங்காயப் பொடி – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

சுவையான இட்லிப் பொடி செய்வது எப்படி?

செய்முறை
முதலில் கறிவேப்பிலையை அலசி உருவி தண்ணீர் காயும் வரை வைக்கவும். மிளகாய் வற்றலை காம்பினை நீக்கி விடவும். கறுப்பு எள்ளினையும், மிளகாய் வற்றலையும் வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.

எள் படபடவென வெடிக்கும் தருவாயில் வாணலியில் இருந்து எள்ளினையும், மிளகாய் வற்றலையும் தனியே தட்டி விடவும். உளுந்தம் பயிற்றினை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.

உளுந்தம் பயிறு வாசனை வந்து வெடிக்க ஆரம்பிக்கும் போது வாணலியில் இருந்து தனியே கொட்டி விடவும். எள்ளு மற்றும் உளுந்தம் பயிற்றினை வறுக்கும்போது அடுப்பினை மிதமாக வைக்கவும்.

பின் வெறும் வாணலியில் அலசி உருவிய கறிவேப்பிலையை போட்டு நன்கு சுருளும் வரை வதக்கவும். கறிவேப்பிலையை வதக்கும் போது அடுப்பினை சிம்மில் வைக்கவும். பின் வறுத்த பொருட்களை நன்கு ஆறவிடவும்.

மிக்ஸியில் ஒரு கை உளுந்தம் பயிறு, ஒரு கை எள்ளு என மாறி மாறி போடவும். அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, தேவையான உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து அரைக்கவும். சுவையான இட்லிப் பொடி தயார். இட்லிப் பொடியுடன் நல்ல எண்ணெய் ஊற்றி ஒரு சேர குழைத்து இட்லி அல்லது தோசையுடன் உண்ணலாம்.

குறிப்பு
இட்லிப் பொடி மிகவும் பொடியாக இல்லாமல் சற்று பரப‌ரப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். விருப்பமுள்ளவர்கள் வெள்ளைப் பூண்டினை எள் மற்றும் மிளகாய் வற்றலுடன் சேர்த்து வறுத்து பொடி தயார் செய்யலாம்.

28/09/2022

உப்புமா சுவையா செய்ய ரகசிய டிப்ஸ் எல்லாரும் விரும்பி வாங்கி சாப்பிடுவாங்க |Vegetable Ravai Upma

இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ‘ரவா உப்புமா’ இனி உதிரி உதிரியாக நீங்களும்

இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர். சுலபமாக இருக்கிறது என்று அடிக்கடி அதை சமைத்து, மற்றவர்களின் அதிருப்தியை பெற்றவர்களா நீங்கள்? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்குத் தான் கரெக்ட்டா இருக்கும். ரவா உப்புமா ஈஸி தான் என்றாலும் அதை சரியாக செய்யவில்லை என்றால் உதிரி உதிரியாக இல்லாமல் சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. ரவா உப்புமா உதிரி உதிரியாக எப்படி நாமும் சமைக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். ரவை வறுத்த ரவையாக இருந்தாலும் சமைக்கும் பொழுது ஒரு முறை வறுத்தால் தான் சுவை நன்றாக இருக்கும். அப்படியே செய்தால் சரியாக வராது. ரவா உப்புமா செய்வதற்கு மிகவும் முக்கியமாக அதில் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு இருக்கிறது. தண்ணீரின் அளவு சரியாக சேர்க்கும் பொழுது தான் உப்புமா உதிரி உதிரியான பதத்திற்கு வரும். அது போல உப்புமா மிகவும் சுவையாக இருப்பதற்கு இந்த பொருட்களை எல்லாம் சேர்க்க வேண்டும். அதற்காக தேவையானவற்றை முன்னரே வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ரவா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 2 கப், பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு, வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு, தண்ணீர் – 3 கப்.

ரவா உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்தம் செய்ய வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதக்கியதும் ரவைக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்பது தான் சரியான விகிதம். இதை நீங்கள் கவனிக்கத் தவறினால் ரவா உப்புமா நன்றாக வராது. தண்ணீர் கொதித்ததும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை குறைத்து கொண்டு வறுத்த ரவையை சிறிது சிறிதாக அதில் சேர்த்து வர வேண்டும்.

நீங்கள் போட்டு முடிக்கும் பொழுதே ரவை முழு தண்ணீரையும் உறிஞ்சிக் கொள்ளும். அதனால் தான் அடுப்பை குறைவாக வைத்துக் கொண்டு ரவையை போட வேண்டும். கட்டி தட்டாமல் ரவையை கிண்டிக் கொண்டே இருங்கள். அதன் பின் அடுப்பை குறைவாக வைத்த படியே வாணலியை மூடி வைக்கவும்.

இரண்டு நிமிட இடைவெளியில் அவ்வபோது கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது போல் ரவை உதிரி உதிரியாக வரும் வரை செய்யுங்கள். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஒரு முறை கிண்டினால் போதும். ரவை உதிரி உதிரியாக சூப்பராக வெந்து வந்திருக்கும்.

இதில் காய்கறி சேர்க்க நினைப்பவர்கள் வெங்காயத்தை வதக்கிய பின் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு சேர்த்து வதக்க வேண்டும். இப்படி ரவா உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரை வைத்து ரவா உப்புமா பரிமாறலாம். வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக நாட்டுசர்க்கரை பயன்படுத்தலாம். சட்னி கேட்பவர்களுக்கு தேங்காய் சட்னி கெட்டியாக அரைத்துக் கொடுத்தால் அட்டகாசமாக இருக்கும்.

28/09/2022

அசத்தலான சிக்கன் மேக்ரோனி செய்வது எப்படி | Chicken Makroni recipe in Tamil | செய்முறை 👇🏻

மேக்ரோனி சிக்கன் ஸ்பெஷல் பிரியாணி செய்முறை பற்றி

தேவையான பொருட்கள்பரிமாறும்: 4

மேக்ரோனி 2 கப்

சிக்கன் அரை கிலோ

வெங்காயம் பெரியது 2

தக்காளி பெரியது ஒன்று

இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் தலா ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் 3 நம்பர்

புதினா கொத்தமல்லி ஒரு தலா ஒரு கைப்பிடி அளவு

தேங்காய்பால் திக்கானதும் ஒரு கப்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் மற்றும் நெய் தலா ஒரு மேஜைக்கரண்டி

மேக்ரோனி சிக்கன் ஸ்பெஷல் பிரியாணி

மேக்ரோனி சிக்கன் ஸ்பெஷல் பிரியாணி செய்முறை பற்றி

இந்த பிரியாணி வித்தியாசமான முறையில் தேங்காய் பால் சேர்த்து ருசியாக செய்யப்பட்டது

செய்முறை டாக்ஸ்

நான் வெஜ்

மீடியம்

டின்னெர் பார்ட்டி

தமிழ்நாடு

ஃபிரையிங்

மெயின் டிஷ்

ஆரோக்கியமான

தேவையான பொருட்கள்பரிமாறும்: 4

மேக்ரோனி 2 கப்

சிக்கன் அரை கிலோ

வெங்காயம் பெரியது 2

தக்காளி பெரியது ஒன்று

இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் தலா ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் 3 நம்பர்

புதினா கொத்தமல்லி ஒரு தலா ஒரு கைப்பிடி அளவு

தேங்காய்பால் திக்கானதும் ஒரு கப்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் மற்றும் நெய் தலா ஒரு மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

முதலில் ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீரை வைத்து நன்றாக கொதி வந்ததும் அதில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி ,இல்லை எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்க்கலாம் நன்றாக கொதி வந்ததும் மேகுரோனியை அதில் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக வேகவைக்க வேண்டும்

இப்பொழுது இந்த மேக்ரோனி வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி தனியாக வைக்க வேண்டும்

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நீ செய்தது பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு அதனோடு சேர்த்து நன்றாக வதக்கி பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி பின் சிக்கன் சேர்து வதக்கி வேக வைத்த மேகுரோனி அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து உப்பு சேர்த்து அதனுடன் நன்றாக கலந்த பின்பு சிறுது தயிர் சேர்த்து வதக்கி 1 கப் தேங்காய் பால் சேர்த்து கொதி விட வேண்டும்.

இப்பொழுது வெந்த மேகுரோனியில் தேவையான அலவய உப்பு சேர்த்து பரிமாறலாம்

26/09/2022

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரகசியம் | சப்பாத்தி பூரிக்கு குருமா | Veg Kurma Recipe in Tamil

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா; சப்பாத்தி பரோட்டா தோசைக்கு பொருத்தமா இருக்கும்!

hotel style veg kurma: ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

veg kurma recipe in tamil: வெஜ் குருமா செய்வதற்கென பல செய்முறைகள் உள்ளன. இருப்பினும், நாம் ஹோட்டல் ஸ்டைலில் இருந்தால் அதிகம் விரும்புகிறோம். எனவே சப்பாத்தி, பரோட்டா, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக உள்ள ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா; சப்பாத்தி பரோட்டா தோசைக்கு பொருத்தமா இருக்கும்!

hotel style veg kurma: ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

veg kurma recipe in tamil: வெஜ் குருமா செய்வதற்கென பல செய்முறைகள் உள்ளன. இருப்பினும், நாம் ஹோட்டல் ஸ்டைலில் இருந்தால் அதிகம் விரும்புகிறோம். எனவே சப்பாத்தி, பரோட்டா, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக உள்ள ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை
வெங்காயம் – பெரியது 1
தக்காளி – பெரியது 1
உப்பு
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பீன்ஸ் – 1 கப்
கேரட் – 1 கப்
முளைகட்டிய பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
காலிபிளவர் – 1 கப் (சூடு தண்ணீரில் நன்கு கழுவியது)
பால் – 1/2 டம்ளர்

அரைக்க

தேங்காய் துருவல் – 1 கப்
கசகசா – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4,5

நீங்கள் செய்ய வேண்டியவை

ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை அவற்றோடு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்

இப்போது குருமாவிற்கான மசாலாவான மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். பிறகு குருமாவிற்கென நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறி தண்ணீர் சேர்க்கவும். பின்னர் குக்கர் என்றால் அவை ஓரளவு வேக தேவையான அளவு விசில் வைக்கவும்.

இதற்கிடையில், அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இப்போது முன்னர் வேக வைத்த காய்கறிகள் ஓரளவு வெந்த பின்னர், அவற்றுடன் இந்த மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். அவை சில நிமிடங்களுக்கு கொதித்த பிறகு அவற்றோடு பால் சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடம் கழித்து 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அவற்றை நன்கு வேக விடவும்.

அவை நன்கு வெந்து தயாரானதும் அவற்றை கீழே இறக்கி கொத்தமல்லி இலைகளை தூவி சப்பாத்தி, தோசைகளுக்கு பரிமாறவும்.

25/09/2022

சுவையான பாய் வீட்டு பீப் பிரியாணி செய்வது எப்படி | Muslim style beef Briyani Recipe in Tamil

சுவையான பீப் தம் பிரியாணி

தேவையான பொருள்கள் :

பாஸ்மதி அரிசி - 1/2கிலோ
பீப் கறி - 1/2கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 50கிராம்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
தக்காளி - 3
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
பிரியாணிமசாலாதூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1கப்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா இலை - ஒரு கைப்பிடி
இஞ்சிபூண்டுவிழுது - 4ஸ்பூன
லெமன் - 1
கேசரி பவுடர் - சிறிது

வேகவைக்க வேண்டியவை:

தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை தண்ணீரை நன்கு வடித்து விட்டு சேர்க்கவும்.அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும் . அரிசி ஒரு கொதி வந்ததும் வடித்து கொள்ளவும்.பின் தனியாக வைத்து கொள்ளவும் .

குக்கரில் கறி போட்டு வேக வைக்க வேண்டும் .

செய்முறை :

பாத்திரதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, இலை, கிராம்பு ஆகியவற்றை போட்டு லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் சிறிது வதங்கியதும்.பின் தக்காளி போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,பிரியாணி மசாலாதூள், போட்டு,வதக்கவும். பின், தயிர், லெமன், புதினா,கொத்தமல்லி,போட்டு நன்கு வதக்கவும். வேக வைத்த கறி போட வேண்டும்.பின் 1டம்ளர் தண்ணீர் தயிர் சேர்த்து வடிகட்டிய சாதத்தை வேகவைத்த கறிகலவையில் போட்டு கேசரி பவுடர் ரெட் கலர் ஆங்காங்கே கொஞ்சம் தூவவும்,மீதி இருக்கும் மீதமுள்ள நெய்யை மேலே விட்டு அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி,பிரியாணி பாத்திரம் மூடியையும் மூடி சிம்மில் 1/2மணி நேரம் வைக்கவும்.பிரியாணி பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் இருந்தால் வைத்தால் நெருப்பு அதிகம் இல்லாமல் தேவையான அளவுக்கு கிடைக்கும்.1/4மணி நேரம் கழித்து சிம்மில் உள்ள அடுப்பை அணைத்து விடவும்.பின்பு திரும்பவும். 1/4மணி நேரம் கழித்து திறந்து சுவையான பீப் தம் பிரியாணி ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --

24/09/2022

தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்👇🏻| எலுமிச்சை ஜுஸ் செய்வது எப்படி | AmmaSamayal

லெமன் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!

Benefits Of Drinking lemon Juice : லெமன் ஜூஸ் குடிப்பது உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா ?

கோடை காலத்தில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பானமாக இருக்கிறது லெமன் வாட்டர் (எலுமிச்சை ஜூஸ்). இது நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
லெமன் வாட்டர் என்பது எலுமிச்சை ஜூஸை தண்ணீரில் கலந்து செய்யப்படும் எளிய பானமாகும். லெமன் வாட்டரில் கலக்கப்படும் ஜூஸின் அளவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இந்த பானத்தை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் குடிக்கலாம். சிலர் லெமன் வாட்டருடன் எலுமிச்சைத் தோல், புதினா இலை, தேன், மஞ்சள் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள்.
கொளுத்தும் கோடை வெயிலுக்கு மிகவும் சுவையாக மற்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் பல இந்திய மாநிலங்களில் லெமன் வாட்டர் மிக பிரபலமானது. மற்ற சீசன்களில் தேநீர், காபி அல்லது வேறு ஏதேனும் பழச்சாறு அருந்தி தங்கள் நாளை துவக்கும் மக்களில் பலர், கோடையில் லெமன் வாட்டருடன் தங்கள் நாளை தொடங்க நினைக்கிறார்கள். பொதுவாக லெமன் வாட்டர் சுவையாக மற்றும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், கூடவே பல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
நிறைந்திருக்கும் வைட்டமின் சி :எலுமிச்சையில் அதிக வைட்டமின் சி காணப்படுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்ஸை சேதப்படுத்தாமல் செல்களை பாதுகாக்க உதவுகிறது. தவிர ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க எலுமிச்சை பானம் உதவுகிறது.
எடை இழப்பு : லெமன் வாட்டர் குடிப்பது உங்கள் நீர் உட்கொள்ளல் அளவை அதிகரிக்க உதவும். எடை இழப்புக்கு உதவும் முக்கிய உத்தியாக அதிக நீர் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. தவிர இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க விரும்புவோர் காலை வேளையில் லெமன் வாட்டர் குடிப்பது நல்லது. ஏனென்றால் காலை நேரத்தில் வளர்சிதை மாற்றம் உச்சத்தில் இருப்பதால் உடல் எடையை குறைக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

ஹைட்ரேஷன் : லெமன் வாட்டர் உடலில் நீர்சத்தை மேம்படுத்துகிறது. வெறுமனே தண்ணீரை குடிப்பது ஒருகட்டத்தில் சலித்து விடும். நீங்கள் தண்ணீரை லெமன் வாட்டர் வடிவில் எடுத்து கொள்ளும் போது தண்ணீர் உட்கொள்ளல் எளிதாகிறது. தவிர லெமன் வாட்டர் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் கார்பனேட்டட் பானங்கள் அருந்துவதை குறைக்க லெமன் வாட்டர் உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது : லெமன் வாட்டரை சூடாக அல்லது வெதுவெதுப்பாக அருந்துவது நம் உடலில் மலமிளக்கியாக செயல்படுகிறது. உங்கள் நாளை நீங்கள் வெதுவெதுப்பான லெமன் வாட்டர் குடிப்பதன் மூலம் துவங்கினால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும், குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கவும் பெரிதும் உதவும். ஆயுர்வேத அடிப்படையில் பார்த்தால் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.
சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்: ஏற்கனவே நாம் குறிப்பித்தது போல எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இது ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. லெமன் வாட்டர் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிப்பது, பளபளப்பான மற்றும் குறைபாடற்ற சருமத்திற்கு உதவுவது உட்பட எண்ணற்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

23/09/2022

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி | முருங்கைக்கீரை நன்மைகள் 👇🏻

முருங்கை கீரையின் பயன்கள் கோடி..!

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும்.

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

கால்சியம், பொட்டாசியம் , ட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. முருங்கைக் காய்கள், இலை, பூ மட்டுமன்றி, பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும். முருங்கை இலைகள், விதைகள், வேர்களில் காயங்களை ஆற்றும் தன்மைகள் உள்ளன.காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.

முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது - உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் உதவுகிறது

முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வாக உள்ளது.முருங்கை இலைப் பொடி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் இ, வைட்டமின் சி ஆகியவை மன வளம், நினைவுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

முருங்கை இலையை உலர்த்தி, பொடி செய்து கிரீன் டீ போல, பயன்படுத்தலாம். அனால் முருங்கைப் பொடியை டீயில் ஒருநாளைக்கு அரை முதல் ஒரு தேக்கரண்டி மட்டுமே பயன்படுத்தவேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முருங்கை கீரை மூலம் இத்தனை நன்மைகள் இருக்கும் போது அதனை பயன்படுத்துவது நல்லது.

23/09/2022

ஆரோக்கியமான பூண்டு சட்னி மிக சுவையாக செய்வது எப்படி | இப்படி ஒரு முறை செய்து அசத்துங்க |Amma Samayal

காரசாரமான பூண்டு சட்னி… தோசை, இட்லிக்கு அதிரடி காம்போ!

இட்லிக்கு மட்டும் இல்லாமல் குழிப் பணியாரம், அரிசி ரவையில் செய்யும் கொழுக்கட்டை எல்லாவற்றிக்கும் தொட்டுக் கொள்ளலாம்

poondu chutney recipe garlic chutney recipe in tamil :
பூண்டு சட்னி இட்லி , தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சாதத்திற்கும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ரொம்ப தூரம் பிரயாணம் செய்பவர்கள் இதை தாரளமாக எடுத்துச் செல்லலாம். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. இட்லிக்கு மட்டும் இல்லாமல் குழிப் பணியாரம், அரிசி ரவையில் செய்யும் கொழுக்கட்டை எல்லாவற்றிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – ஒரு கைப்பிடி
புளி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு – தாளிக்க

முதலில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் பூண்டுகளை போட்டுபொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடலைப்பருப்பை போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் வறுத்தெடுத்த பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கறிவேப்பிலைதாளித்து, அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து இறக்கி வைக்கவும். பூண்டை அப்படியே சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி சட்னி அடிக்கடி செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்

19/09/2022

தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்👇🏻| எலுமிச்சை ஜுஸ் செய்வது எப்படி | AmmaSamayal
லெமன் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!

Benefits Of Drinking lemon Juice : லெமன் ஜூஸ் குடிப்பது உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா ?

கோடை காலத்தில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பானமாக இருக்கிறது லெமன் வாட்டர் (எலுமிச்சை ஜூஸ்). இது நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
லெமன் வாட்டர் என்பது எலுமிச்சை ஜூஸை தண்ணீரில் கலந்து செய்யப்படும் எளிய பானமாகும். லெமன் வாட்டரில் கலக்கப்படும் ஜூஸின் அளவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இந்த பானத்தை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் குடிக்கலாம். சிலர் லெமன் வாட்டருடன் எலுமிச்சைத் தோல், புதினா இலை, தேன், மஞ்சள் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள்.
கொளுத்தும் கோடை வெயிலுக்கு மிகவும் சுவையாக மற்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் பல இந்திய மாநிலங்களில் லெமன் வாட்டர் மிக பிரபலமானது. மற்ற சீசன்களில் தேநீர், காபி அல்லது வேறு ஏதேனும் பழச்சாறு அருந்தி தங்கள் நாளை துவக்கும் மக்களில் பலர், கோடையில் லெமன் வாட்டருடன் தங்கள் நாளை தொடங்க நினைக்கிறார்கள். பொதுவாக லெமன் வாட்டர் சுவையாக மற்றும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், கூடவே பல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
நிறைந்திருக்கும் வைட்டமின் சி :எலுமிச்சையில் அதிக வைட்டமின் சி காணப்படுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்ஸை சேதப்படுத்தாமல் செல்களை பாதுகாக்க உதவுகிறது. தவிர ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க எலுமிச்சை பானம் உதவுகிறது.
எடை இழப்பு : லெமன் வாட்டர் குடிப்பது உங்கள் நீர் உட்கொள்ளல் அளவை அதிகரிக்க உதவும். எடை இழப்புக்கு உதவும் முக்கிய உத்தியாக அதிக நீர் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. தவிர இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க விரும்புவோர் காலை வேளையில் லெமன் வாட்டர் குடிப்பது நல்லது. ஏனென்றால் காலை நேரத்தில் வளர்சிதை மாற்றம் உச்சத்தில் இருப்பதால் உடல் எடையை குறைக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

ஹைட்ரேஷன் : லெமன் வாட்டர் உடலில் நீர்சத்தை மேம்படுத்துகிறது. வெறுமனே தண்ணீரை குடிப்பது ஒருகட்டத்தில் சலித்து விடும். நீங்கள் தண்ணீரை லெமன் வாட்டர் வடிவில் எடுத்து கொள்ளும் போது தண்ணீர் உட்கொள்ளல் எளிதாகிறது. தவிர லெமன் வாட்டர் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் கார்பனேட்டட் பானங்கள் அருந்துவதை குறைக்க லெமன் வாட்டர் உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது : லெமன் வாட்டரை சூடாக அல்லது வெதுவெதுப்பாக அருந்துவது நம் உடலில் மலமிளக்கியாக செயல்படுகிறது. உங்கள் நாளை நீங்கள் வெதுவெதுப்பான லெமன் வாட்டர் குடிப்பதன் மூலம் துவங்கினால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும், குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கவும் பெரிதும் உதவும். ஆயுர்வேத அடிப்படையில் பார்த்தால் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.
சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்: ஏற்கனவே நாம் குறிப்பித்தது போல எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இது ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. லெமன் வாட்டர் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிப்பது, பளபளப்பான மற்றும் குறைபாடற்ற சருமத்திற்கு உதவுவது உட்பட எண்ணற்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

17/09/2022

உளுந்து தோசை மொறு மொறுனு இப்படி செஞ்சு பாருங்க | அரிசி உளுந்து தனித்தனியா அரைக்க தேவையில்லை
அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?

பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்து சமைக்கும் உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.
இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உட்கொண்டு வரலாம். தினமும் இதனை நாள்தோறும் தவறாமல் செய்பவர்களுடைய மெலிந்த தேகம் சீக்கிரமே நன்கு புஷ்டி பெறும்.
உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்.
உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது. எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் உளுந்து பதார்த்தங்களை அடிக்கடி அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் உடல் நல்ல வலுவுடன் மாறும்.

16/09/2022

விரிசல் இல்லாத குண்டு குண்டு குலோப் ஜாமுன் | குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குலோப் ஜாமுன்
குலாப் ஜாமூன் How to make soft Gulab jamun
குலாப் ஜாமூன்

சாஃப்ட்டான சுவையான குலாப் ஜாமூன் செய்ய எளிமையான முறை கொடுக்கப்பட்டுள்ளது. ( How to make soft Gulab jamun )

தேவையான பொருட்கள் :

பசும் பால் = 1 லிட்டர்

எண்ணெய் = தேவையான அளவு

தண்ணீர் = தேவையான அளவு

மைதா = 1/2 கப்பு

நெய் = 2 ஸ்பூன்

சோடா = 1/4 ஸ்பூன்

சர்க்கரை = 1 1/2 கப்பு

ஏலக்காய் தூள் = 1/2 ஸ்பூன்

செய்முறை : 1

முதலில் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, நன்கு சுண்ட காய்ச்சவும். காய்ச்சி கிடைக்கும் கோவாவை தனியாக எடுத்து வைக்கவும். பின் மைதாவுடன் ஆப்ப சோடா சேர்த்து 1 அல்லது 2 முறை சலித்து அதனுடன் கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

செய்முறை : 2

சலித்த மைதா,சோடா,நெய் கலவையுடன்,எடுத்து வைத்த கோவாவை சேர்த்து நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் கொஞ்சம் நெய் சேர்த்து, உருட்டி வைத்த உருண்டைகளை உடையாமல் போட்டு வேகவிட்டு பொன்னிரமானதும் எடுத்து விடவும்.

செய்முறை : 3

வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும்,தண்ணீருடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும், கொதித்த பின் கொஞ்சம் பால் சேர்க்கவும். இப்போது திரண்டு வரும் அழுக்கை நீக்கி விடவும். சர்க்கரை,பால் இரண்டு கொதித்து பாகு தயார்ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.பாகுவில் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். இறுதியில் பொரித்து வைத்த உருண்டைகளை செய்து வைத்துள்ள சர்க்கரை பாகுவில் நன்றாக ஊற வைக்கவும்.

இப்போது சுவையான சாஃப்ட்டான குலாப் ஜாமூன் ( soft Gulab jamun ) தயார் !!!

Want your business to be the top-listed Beauty Salon in Tiruvannamalai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Kammangalai Street
Tiruvannamalai
606601