Nalam Wellness Point
Accupunture Clinic
"சுகப்பிரசவம்" என்பதே இன்று பல கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஒரு அபூர்வமான விஷயமாகிவிட்டது. "பனிக்குடம் உடைஞ்சிடுச்சு, நீர் வற்றிப்போச்சு, நேரம் சரியில்ல" என்று ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, நல்லபடியாகப் பிறக்க இருக்கும் குழந்தையைக்கூட அறுத்து எடுத்து பில் போடுவதில்தான் நம்ம ஊரு மருத்துவ வியாபாரிகள் பலரும் குறியாக இருக்கிறார்கள்.
ஆனால், இந்தச் செய்தியைப் படிக்கும்போது அந்த மருத்துவர்களை உண்மையிலேயே கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஆமினா என்ற பெண், 5 நாட்களில் 4 குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்யாமல் பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தை மே 9ம் தேதி பிறந்த நிலையில் அடுத்த 3 குழந்தைகளும் மே 14ம் தேதி பிறந்துள்ளன. இது மிகவும் சவாலான பிரசவம் என்றாலும் தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.
நான்கு குழந்தைகளைச் சுமக்கும் ஒரு தாய்க்கு, ஐந்து நாட்கள் பொறுத்திருந்து, கத்தியைக் கையில் எடுக்காமல் இயற்கையான முறையில் பிரசவம் பார்த்த அந்த மருத்துவர்களின் பொறுமையையும், மருத்துவ அறத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
லட்சக்கணக்கில் பில் போடுவதற்காகச் சாதாரணமாகப் பிறக்க வேண்டிய குழந்தையையும் அறுத்து எடுக்கும் "பகல் கொள்ளையர்களுக்கு" மத்தியில், இப்படிப்பட்ட மருத்துவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்!
14/05/2026
அக்குபஞ்சர் என்றதும் பலருக்கு நினைவுக்கு வருவது வலிமிகுந்த ஊசிகளும், மின்சார சாதனங்களும். ஆனால், உண்மை அதுவல்ல!
🚫உண்மையான அக்குபஞ்சர் என்ன?
✨ இது ஒரு 8000 ஆண்டுகள் பழமையான, பாரம்பரீய மருத்துவ முறை.
⚖️ உடலில் உள்ள சக்தி ஓட்டத்தை (energy flow) சரிசெய்து, நோயை வேரறுக்கிறது.
🚫 பல ஊசிகள் போடுவது உண்மையான அக்குபஞ்சர் இல்லை.
✅ உண்மையான அக்குபஞ்சர், சரியான ஒரு புள்ளியைத் தொட்டு சிகிச்சை அளிப்பதாகும்.
🙅♂️ நவீன காலத்தின் பெயரில் விற்கப்படும் மின்சார கருவிகள், Computer Diagnosis இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உங்கள் ஆரோக்கியத்திற்கு சரியான தேர்வை எடுங்கள். உண்மையான அக்குபஞ்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்!
#சொரியாசிஸ்
11/05/2026
Acupuncture Treatment in Tiruvannamalai, book an appointment via WhatsApp at 9445659834
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு (குறள் 943)
நமக்கு முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு அதிகமாக நோய்கள் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பதுதான். ஒரு மனிதன் தன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் அதை தரக்கூடிய உணவுகளையும் அறிந்து, *பசியின் அளவுக்குத் தக்க (போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து)* உணவுகளை உட்கொண்டால், இந்த உடல் ஆரோக்கியமாக பல காலம் வாழ உதவும் என்கிறார் திருவள்ளுவர்.
தொலைக்காட்சி விளம்பரங்களையும், கடைகளின் அலங்காரத்தையும், பொருட்களின் வெளி தோற்றத்தையும், பார்த்து ஏமாறாமல், நம் உடலுக்கு போதிய சத்துக்களை தரக்கூடிய நல்ல உணவுகளை (முக்கியமாக பழங்களை நாம் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும், பழங்கள் செரிமானத்திற்கு பெரிதும் உதவும்) தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின் (குறள் 942)
உட்கொண்ட உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. ஜீரணம் முறையாக நடக்காததால் செரிமானத்தின் பின் கழிவுகளும் முழுமையாக வெளியேறுவதில்லை.
அதனால்தான் திருவள்ளுவர் கூறுகிறார், முந்தைய வேளையில் உண்ட உணவு ஜீரணமாகி விட்டதா என்பதை அறிந்து. பசி மனிதர்களின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பது இரண்டு விசயங்கள் தான் முதலில் உடலில் உண்டாகும் சக்திக் குறைபாடு, மற்றது உடலில் சேரும் கழிவுகள். ஜீரணம் முறையாக நடைபெறாத உண்டான பிறகு உணவை உட்கொண்டால் இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது என்று. காரணம் நன்றாக பசி உண்டான பிறகு உணவை உட்கொண்டால், அவை எளிதில் ஜீரணமாகிவிடும் மேலும் உடலில் எந்த கழிவுகளும் தேங்காது.
திருவள்ளுவர் மருந்தெனக் குறிப்பிடுவது நாம் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தும் புட்டியில் அடைத்த, பதப்படுத்திய மருந்துகளையோ அல்லது ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளையோ அல்ல. அவர் காலத்தால் பயன்பாட்டிலிருந்த, சித்த மருத்துவ மூலிகைகளை. அவர் காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டவை, எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத இலைகள், வேர்கள், பட்டைகள் மற்றும் தாவரங்கள் தான்.
இந்த மூலிகைகளை நோயில்லாதவர்கள் உட்கொண்டால் கூட அவற்றை உடலானது உணவாக ஏற்றுக்கொள்ளும், எந்த பாதகமும் உருவாக்காது. இப்படி உணவாக செயல்படக்கூடிய மூலிகைகள் கூட தேவையில்லை, பசித்து மட்டும் உண்டாலே போதும் என்கிறார் திருவள்ளுவர்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (குறள் 941)
திருவள்ளுவர் காலத்தில் சித்த மருத்துவம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டதால், திருவள்ளுவர் சித்த மருத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். மருத்துவர்கள் தவறுசெய்யக் கூடும் என்பதனால் சித்த மருத்துவர்கள் என்று உவமை கூறாமல், முறையாக வகுக்கப்பட்ட சித்த மருத்துவ நூல்களை உவமையாக காட்டுகிறார்.
பசிக்கு மிகுதியாக உண்பது செரிமான மண்டலத்தை சீர் கெடுக்கும். செரிமான மண்டலம் சீர்கேடு அடையும் போது, உண்ட உணவு வயிற்றிலேயே அதிக நேரம் தேங்கிக் கிடக்கும். வெளியில் அதிக நேரம் கிடக்கும் உணவு எப்படி கெட்டுப் போகுமோ, அதைப் போன்றே செரிமானமாகாத உணவும் வயிற்றுக்குள்ளே கெட்டுப்போகத் தொடங்கும். உணவாக நாம் உட்கொண்டவை கழிவாக மாற்றம் அடையும். மேலும், ஜீரணம் முறையாக நடக்காததால் உடலில் சக்தி தட்டுப்பாடும் சோர்வும் உண்டாகும்.
உடலில் சோர்வோ அசதியோ ஏற்படும்போது உடலுக்கு ஓய்வு கொடுக்காமல், அதை அலட்சியம் செய்தாலும். உடலுக்கு இரவில் போதிய உறக்கம் கிடைக்காமலிருந்தாலும். உடல் பலகீனமாகி உடலின் செயல்திறனும் குறையும்.
உடலின் செரிமான திறனும், செயல்திறனும் குறையும்போது, உடலில் சேரும் கழிவுகள் வெளியேற முடியாமல், கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்கத் தொடங்கும். மேலே குறிப்பிட்ட காரணங்களினால் சித்த மருத்துவ நூல்கள் கூறுவதைப் போன்று வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்களை உருவாகின்றன என்கிறார் திருவள்ளுவர்.
பசியின் அளவை அறிந்து அளவாக உண்பதும், உடலுக்கு போதிய ஓய்வு கொடுப்பதும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் பாதுகாக்கும்.
25/04/2026
🌿 சொரியாசிஸ் பிரச்சனைக்கு தீர்வு தேடுகிறீர்களா?
முன்பு இருந்த கடுமையான அரிப்பு, சிவப்பு, தோல் உரிதல் 😣
👉 இன்று மென்மையான, ஆரோக்கியமான தோல் ✨
Psoriasis காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்படுகிறீர்களா?
மருந்துகள், கிரீம்கள் தற்காலிக நிவாரணம் மட்டும்தானா?
💡 இப்போது இயற்கையான மாற்றம் பெறுங்கள் –
அக்யுபங்க்சர் சிகிச்சை மூலம்!
✔ அரிப்பு & அழற்சி குறையும்
✔ உடலின் இயற்கை குணமடையும் சக்தி அதிகரிக்கும்
✔ இரத்த ஓட்டம் மேம்படும்
✔ பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை
📍 நலம் வெல்னஸ் சென்டர்
🕘 ஞாயிறு காலை 7 – 10 மணி
📞 9894094371
👉 தாமதிக்காதீர்கள்… உங்கள் குணமடைவு பயணத்தை தொடங்குங்கள்!
#சொரியாசிஸ்
25/04/2026
*உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.? இதோ புதிய அகுபங்சர் கூறும் ரகசியங்கள்!*
நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் வயிற்றின் ஜீரணத் திறனில்தான் அடங்கியுள்ளது. வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் புதிய அகுபங்சர் புத்தகம் கூறும் மிக முக்கியமான வாழ்வியல் குறிப்புகள்:
🔥 1. பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்!
பசி இல்லாத போது உணவை உட்கொண்டால், அது முறையாக ஜீரணமாகாமல் வயிற்றில் தங்கி நஞ்சாக (கழிவாக) மாறிவிடும். பசியின்றி கட்டாயப்படுத்தி உண்பது ஜீரண சக்தியை அழிப்பதோடு கண் பார்வையையும் குறைக்கும்.
💧 2. தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்காதீர்கள்!
காலையில் எழுந்ததும் தாகம் இல்லாமல் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பது மிகவும் ஆபத்தானது மற்றும் ஜீரண நெருப்பை அணைத்துவிடும். உணவை ஜீரணிக்க உறுதியான சக்தி தேவை, எனவே தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
💊 3. ரசாயன மாத்திரைகளைத் தவிருங்கள்!
வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் (Minerals) மற்றும் இரும்புச் சத்துக்கள் போன்ற செயற்கையான மாத்திரைகளை உட்கொள்வது வயிற்றை நேரடியாகத் தாக்கிப் புண்ணாக்கி, ஜீரணத்தை அடியோடு நாசமாக்குகிறது.
🍋 4. வலியின் போது புளிப்புச் சுவையைத் தவிருங்கள்!
உடலில் தசை வலிகளோ, நோயோ இருக்கும்போது புளிப்புச் சுவை (புளி, தக்காளி, எலுமிச்சை) கொண்ட உணவுகளை உண்பது வயிற்றையும், கல்லீரலையும் வெகுவாகப் பாதிக்கும். எனவே, நோயுற்ற காலங்களில் புளிப்பைத் தவிர்ப்பது நலம்.
🧘♂️ 5. மன அமைதியோடு உண்ணுங்கள்!
பயம், அவசரம் மற்றும் பதட்டமான மனநிலையுடன் உணவை உட்கொள்ளும் போது, ஜீரணம் கெட்டு அந்த உணவே நஞ்சாக மாறுகிறது. அமைதியான மனநிலையே நல்ல ஜீரணத்திற்கான முதல் படியாகும்.
😴 6. இரவு நேர ஓய்வு கட்டாயம்!
இரவு நேர விழிப்பும் வேலையும் உடலின் உறுப்புகளைப் பலவீனமாக்கிவிடும். மன உளைச்சல் மற்றும் உடல் அசதியை நீக்க, சரியான இரவுத் தூக்கமும் ஓய்வும் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.
அகுபங்சர் தீர்வு: ✨
வயிறு (நிலம் மூலப்பொருள்) சம்பந்தப்பட்ட ஜீரணக் கோளாறுகள், அல்சர், ஏப்பம், பசியின்மை போன்ற அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க, மண்ணீரல் சக்தி நாளத்தில் உள்ள Sp5 என்ற அகுபங்சர் புள்ளியைத் தூண்டுவதே மிகச் சிறந்த இயற்கையான தீர்வாகும்.
இயற்கையான பசி, தாகத்திற்கு மதிப்பளிப்போம்! ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்! 🌱
- ஃபஸ்லூர் ரஹ்மான்,
புதிய அகுபங்சர்.
.
09/04/2026
Chennai Memes
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
682, Vettavalam Road
Tiruvannamalai
606601
